மதுரை கீழடி அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு
- ourshepherdsvoice
- Feb 26, 2018
- 1 min read
மதுரை கீழடி அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு இந்த உலகத்திற்கு அதிலும் இந்தியா விற்கு குறிப்பாக தமிழர்களுக்கு பலசெய்திகளை வெளிப்படுத்திருக்கிறது. பண்டைய காலா வாழ்க்கைமுறை நமக்கெல்லாம் ஆச்சரியத்தையும் வியப்பையும் முன்வைத்திருக்கிறது. பண்டையர் கட்டிட முறைமைகள், அதற்கு பயன்படுத்திய பொருட்கள் இன்னும் பிற முறைமைகள் நம்மையெல்லாம் அதிசயத்தில் ஆழ்த்துகிறதென்னவோ உண்மைதான்.
குறிப்பாக கீழடி அகழ்வாராய்ச்சியாளர்கள் வெளியிட்ட முக்கிய குறிப்புகள் இரண்டு,
1 . மதம் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பது
2 . திருமணங்களில் தாலி போன்ற சொரூபங்கள் எதையும் பயன்படுத்தவில்லை என்பது.
இந்த இரண்டு தகவல்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக நாம் கருத்தில் கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
அப்படியானால் பழங் காலத்தில் மதங்கள் என்பது அறவே காணப்படவில்லை என்பது தெளிவாகிறது.
இதை தான் வேதாகமம் நமக்கு கூறுகிறது. மதம் என்ற ஒன்று வேதாகமத்தில் இல்லை. கிறிஸ்தவமும் மதமில்லை நெறியே.
அடுத்ததாக ஆதிகால மக்களிடையே திருமண வைபவங்களில் தாலி போன்ற முறைமைகளை பயன்படுத்தவில்லை என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி தெளிவுபடுத்திக்கிறது. இதுவும் வேதாகமம் நமக்கு உணர்த்தும் உண்மையாகும் .
சுவி .பாபு.டீ.தாமஸ்
Comentarios