Syria under threat
“அழியப்போகிறது சிரியா!” 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்"
இதில் எல் அளவும் சந்தேகம் வேண்டாம். இது உண்மை தான். அப்படி யானால் அழிவை வேடிக்கை பார்க்கலாமா ? அல்லவே அல்ல. மாறாக இதை எச்சரிக்கையாக கொள்ளவேண்டும். ஏன் சிரியா தேசம் அழியவேண்டும் என்று பார்க்கவேண்டும். அழிவிலிருந்து எப்படி சிரியா மக்களை காப்பாற்றவேண்டும் என்று பார்க்கவேண்டும். அதற்காகவே இது முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது என்று உணரவேண்டும்.
பைபிள் ஒரு மத நூல் அல்ல. கிறிஸ்துவம் ஒரு மதமும் அல்ல. மதம் என்பது ஒரு சாராரை, ஒரு பிரிவினரை அல்லது ஒரு பகுதியினரை அல்லது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். ஆனால் வேதாகமத்தில் / பைபிளில் ஆதியும் உண்டு முடிவும் உண்டு, வரும் காரியங்களும் உண்டு. உலக தோற்றமும் அதன் வளர்ச்சியும், ராஜ்ஜியங்களின் தோற்றமும் வீழ்ச்சிகளும் உண்டு. யாருக்குப்பின் யார்யார் வாழ்ந்தார்கள் என்கிற விவரங்களும் உண்டு.ஆக சரித்திரமும் பூகோளமும் நீதிசாஸ்திரங்களும், போதனைகளும், பின்னடப்பவைகளும், வாழ்க்கை நெறிகளும் அடங்கிய பைபிள் எப்படி ஒரு பிரிவினரை சார்ந்ததாக இருக்கமுடியும்.
அதேபோல கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களை அல்லது கிறிஸ்துவின் போதனைகளின் படி நடப்பவர்களை குறிக்கும் சொல்லாடலாகும். இயேசு கிருஸ்து ஒரு பிரிவை சார்தவரா அல்லவே. இயேசு கிருஸ்து உலக ரட்சகர். உலகவாழ் மனுக்குலம் அனைத்திற்கும் மீட்கும் பொருளாய் இவுலகில் உதித்த பரம்பொருள் இயேசு கிறிஸ்துவே. ஆக இவரும் ஒரு பிரிவினருக்கு சொந்தமானவரல்ல மாறாக அனைவருக்குமானவர்.
சிரியா தேச அழிவிலிருந்து காப்பாற்ற வழியிருக்கிறது. நிச்சயம் காப்பாற்றமுடியும். அழிவை முன்னறிவித்த அதேவேதகமத்தில் அழிவிலிருந்து காக்கக்கூடிய வழியும் இருக்கிறது.
பாபு டீ தாமஸ்