top of page

Let us join Hands

மதிப்பிற்குரிய தேவ ஊழியர்களே, அன்பு சகோதர சகோதரிகளே,

உங்கள் யாவருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறோம். சமீபகாலமாக தேவ ஊழியர்களுக்கும் தேவ சபைகளுக்கும் தேவ மக்களுக்கும் விரோதமாக பலவிதத்தில் இடையூறுகள் இன்னல்கள் பலஇடங்களில் ஆராதனைகளே நடத்தகூடாதபடி பலவகைகளில் பிரச்சனைகள் தீக்கரைகள் முதல் ரத்தம் சிந்துதல் வரை நீண்டிருப்பதை யாவரும் அறிவோம். சில வருடங்களுக்கு முன் தேசத்திற்கு வெளியில் நடந்தவை பிறகு நமது மாநிலங்களுக்கு வெளியில் எங்கோ தொலைவில் நடந்ததாக அமைதியாய் இருந்துவிட்டோம். இப்போதோ அதே சம்பவங்கள் நமக்கருகில் நம் மாநிலத்தில் நம்மை சுற்றி நடக்க ஆரம்பித்து விட்டது. இப்போதும் நாம் அமைதியாய் இருக்கிறோம், ஏன் நாம் பாதிக்கப்படவில்லை.

மகாத்மா காந்தி அவர்கள், நமது தேசம் சுதந்திரம் பெறவேண்டும் என்று அகிம்சை வழியில் அரப்போராட்டம் நடத்தி வெற்றிகண்டார். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நமது இந்தியா சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம், அவசியமும் கூட. இனியும் காலம் தாழ்த்துதல் நமக்குநாமே கல்லை கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு சமம். நாம் அனைவரும் ஒன்று பட வேண்டிய காலம் இது. நாம் அனைவர்க்கும் ஒருவரே தேவன், ஒரே ரட்சகர், ஒரே பைபிள். அப்படியானால் ஏன் நமக்கு வலிக்கவில்லை. ஏன் நாம் இழந்ததாக உணரவில்லை. நம் தேசம், நம் உரிமை, பின் ஏன் தயக்கம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. இன்றே கரம் கோர்ப்போம். ஆண்டவர் நமக்கு துணை இருக்கிறார். ஆமென்.

சுவி .பாபு டீ தாமஸ்

 
Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by COMMUNITY CHURCH. Proudly created with Wix.com

  • Twitter Classic
  • c-facebook
bottom of page