top of page

Justice is lacking in India

தமிழக சட்டப்பேரவையில் ஜெ படம்

தமிழக சட்டப்பேரவையில், ஜெயலலிதா படத்தை வைத்தது தார்மீக அடிப்படையில் தவறு என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. ஆனால் யாருடைய படத்தை சட்டப்பேரவையில் வைப்பது என்பதற்கான பிரத்தியேக சட்ட வரையரை இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்திருப்பது, மக்களுகிருக்கும் கடைசி நம்பிக்கையும் அற்றுபோய் விட்டது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

சட்டப்பேரவை, மக்களின் நலனுக்கான மாமன்றம். மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் பணியாற்றக் கூடிய சட்டபேரவையில் மக்களுகாக முன்மாதிரியாக வாழ்ந்த தலைவர்களின் நிழற்படம் வைப்பது மரபு. ஏன் ? வளர்ந்து வரும் மக்கள் பிரதிநிதிகள் வாழ்வில் இவை உந்து சக்தியாக இருக்கும் என்பதற்காக. எல்லாவற்றிற்கும் சட்டம் இயற்றி நடைமுறை படுத்துவதென்பது இயலாத ஒன்று.

மேலும் மக்கள் பணியில் ஊழல் புரிந்து, வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் படத்தை சட்டப்பேரவையில் வைத்திருப்பதின் முலம் மக்களை அவமதிப்பதாகவே கருதமுடியும். மக்களுக்கான மாமன்றத்தில் மக்களின் வரிபணத்தில் ஊழல் புரிந்து வருவாய்க்கு அதிகமாய் சொத்து சேர்த்தவர் உருவப்படம் சட்டப்பேரவையில் இருந்து அகற்றப்பட வேண்டியது தான் முறையாகும். மக்களுக்கான கடை நம்பிக்கை நீதி மன்றமே. அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பத்திரமான நீதிமன்றங்களே மக்களுக்காக குரல் கொடுக்க மறுத்தால், மக்கள் நசுக்கபடுவது திண்ணம்.

இதை புரிந்துக் கொண்டு நீதிமன்றம் செயல் பட்டால் நல்லது .

Evg.Babu.T.Thomas posted this for the court cancelling the litigation filed by the opposition for directives to the speaker of the Tamilnadu Legislative counsel in the matter of unveiling full figure photo at the premises.

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page