top of page

Prayer gives victory

கொரிய தீபகற்பத்தில் அமைதி ! ஜெபத்தின் வல்லமையை பாருங்கள் !!

அறுபது ஆண்டுகளாக நிலவிவந்த வடகொரியா தென்கொரியா பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். இது அதிசயம் ஆனால் உண்மை. நேற்று வரை இரு துருவங்களாக இருந்தவர்கள், பகைமை பாராட்டியவர்கள் சேர்ந்திருக்கிறார் கள். உலகமே வியப்பில் ஆழ்ந்திருக்கிறது. இது எப்படி சாத்தியம் ஆனது ?

வடகொரியாவின் அதிபர் தென்கொரியாவின் எல்லையிலும், தென்கொரியாவின் அதிபர் வடகொரியாவின் எல்லையிலும் தங்கள் பாதம் பதித்தனர். இருவரும் ஆரதழுவிக்கொண்டனர். கைகுலுகிக்கொண்டனர். இரு நாட்டிலும் இருந்து மண்ணும் தண்ணீரும் கொண்டுவந்து மரம் நட்டனர். அமைதி ஒப்பந்தம் கை எழுத்தானது. வர இருக்கிற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு நாடுகளும் ஓர் அணியாக பங்கேற்கும். இரு நாடுகளுக்கிடையில் ரயில் போக்குவரத்து துவங்கயிருக்கிறது. கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றமோ, அணு ஆயுத அச்சுறுத்தலோ இனி இல்லை எனும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு முதல் கட்டமாக இரு நாட்டு எல்லையில் ஒலிபெருக்கிமுலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுவது நிறுத்தபட்டுள்ளது.

சில மாதங்கள் முன்பு வரை உலகத்தையே அச்சுறுத்திய நாடு வடகொரியா. குறிப்பாக தென்கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா இன்னும் பிற அண்டை நாடுகளுக்கு மிக பெரிய தலைவலியாக வடகொரியா இருந்தது. சொல்லப்போனால் அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனம் வடகொரியா. நானே ராஜா நானே மந்திரி போல வீட்டிற்க்கு ஒரு சட்டாம் பிள்ளை என்று வடகொரியாவின் ஆட்டம் எல்லை மீறி போனது. எப்போது என்ன நடக்கும் எனும் பீதி இல் மக்களை தினம் தினம் உறைய செய்வதே வழக்கமாக கொண்டிருந்தார் வடகொரியா அதிபர் குழந்தைச்சாமி. இது தான் மீடியாக்கள் வைத்த செல்ல பெயர்.

அணு ஆயுத சோதனை கள் பல நிகழ்த்தியது மட்டுமல்லாது அணு குண்டை விட பல மடங்கு அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையையும் நிகழ்த்தி தன் அடாவடி தனத்தை ஓங்கி ஒலிக்க செய்தது வடகொரியா. இது போதாதென்று அமெரிக்கா போன்ற நாடுகளை வாம்புக்கு இழுத்து மீடியாவில் தலைப்பு செய்தியே குழந்தைச்சாமி என்றானது .

இத்தனை பரபரப்புக்களுக்கு இடையில் தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைதி நடவடிக்கை. இது எப்படி சாத்தியமானது என்பது அநேகமாக எல்லார் மனம்களிலும் இருக்கும் புரியாத புதிர். வடகொரியாவின் நிலை இது என்றால் தென்கொரியாவோ தான் உண்டு தன் வேலை உண்டு நிலை பாடு தான். சுருங்க சொல்லவேண்டுமானால் வடகொரியாவிற்கு நேர் எதிரானவர்கள் தென்கொரியவினர். முப்பது சதவிததினருக்கும் அதிகமானவர்கள் கிறிஸ்தவர்கள். உலகிலேயே மிகபெரிய திருசபையை கொண்ட நாடும் தென்கொரியா தான். முழங்கால் யுத்த வீரர்கள். ஜெபமே ஜெயம் என்று அனுபவத்தால் உணர்ந்தவர்கள்.

பொருளாதரத்தில் முன்னேறிய நாடு என்பதால் மக்கள் வாழ்க்கை தரமும் உயர்வு பெற்ற நாடாக தென்கொரியா விளங்குவதில் ஐயம் இல்லை. இவர்களின் ஒரே விருப்பம் சமாதானம். போரின் போது பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவேண்டும் எனும் ஏக்கம் கொரிய மக்களின் நீண்டகால கனவு. தென்கொரியா மக்களின் விண்ணப்பதை, வேண்டுதலை, மனோவாஜையை கர்த்தர் கண்ணோக்கினார்.

விளைவு வடகொரியா, சர்வாதிகார போக்கிலே எல்லை மீறி போனதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைக்கு தள்ளபட்டர்கள். வடகொரியாவின் முழுகவனமும் தன்னை பலமுள்ள நாடாகவே முன்னிறுத்தவேண்டும் என்பது. ஆக இராணுவமும் அதைசார்ந்த தேவைகளுக்கே முதலிடம் தரப்பட்டது. இதற்கிடையே நடந்த பல நிகழ்வுகளினால் ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகள் வடகொரியாவை மேலும் மேலும் நெருக்கத்திற்கு உள்ளாகியது. வாழ்வா சாவா நிலைக்கு தள்ளபட்டதின் விளைவு சர்வாதிகார நிலைபாட்டிலே மாற்றம் உருவாக காரணமாக அமைந்துவிட்டது.

வடகொரியா வளைக்கப்பட்டதாகவே கொள்ளலாம். இறங்கி வந்த வடகொரியா அமைதிக்கு பச்சை கம்பளமே விரித்தது. முதல் நிகழ்வாக தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மெகா சம்பவம் என்னவென்றால் வடகொரியா அதிபர் ஒரு தொடர் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர், ஆனால் இரு நாட்டின் உச்சி மாநாடு, அமைதி பேச்சுவார்த்தைகள் மற்றும் நடந்த அனைத்து நிகழ்வுகளிலும் வடகொரியா அதிபர் தன் பழக்கத்தை தவிர்த்து புகை பிடிக்காமல் கண்ணியமாக நடந்து கொண்டார் என்பது மற்றுமோர் அதிசயம்.

அதிபர்கள் கிம் ஜோங் உன், மூன் ஜே இன் இருவரும் இணைந்து விட்டார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்.

சுவீ. பாபு தா தாமஸ்

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page