Is criminal background essential ?
நாட்டை ஆள குற்ற பின்னணி அவசியமா ?
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 883 கோடீஸ்வரர்கள், 645 கிர்மினல்கள் போட்டியிடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலை இங்கு மாத்திரமல்ல. எல்லா மத்திய, மாநில மற்றும் அனைத்து தேர்தல்களிலும் இதே நிலவரம் தான். கிர்மினல்களும், கோடீஸ்வரர்களும் தான் போட்டியிட முடியும், ஜெயிக்க முடியும், ஆளமுடியும் எனும் வரம்புக்குள் வந்து விட்டோம்.
பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆகவே ஒரு பிரதான கட்சியின் வேட்பாளராக வேண்டுமானால் ஆள் பலமும், பண பலமும் அவசியம். வேட்பாளர் நினைக்கிறார், இவை இரண்டும் இருந்தால் தான் ஒருவருக்கு பிரதானமான கட்சியில் வேட்பாளர் அந்தஸ்து கிடைக்கும். அதே போல ஒரு பிரதானமான கட்சி மேலிடம் என்ன நினைகிறது என்றால் இவை இரண்டும் உள்ள ஒருவரால் மட்டுமே மக்களின் வாக்குகளை பெறமுடியும் என்றும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறமுடியும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த நம்பிக்கையை தருவது மக்களே. மக்கள் என்ன நினைகிறார்கள். ஒரு மக்கள் பிரதிநிதி என்பவர் சமுக சிந்தனை உள்ளவராக, சமுக அக்கறை உள்ளவராக, சமுக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவராக, சுற்று சூழல் ஆர்வலராக, சமுக சேவகராக, பொருளாதார வல்லுனராக, அரசியல் தேர்ச்சி உள்ளவராக மக்களோடு மக்களாக வாழ்பவராக, மக்கள் அடிப்படை பிரச்சனை களை உணர்ந்தவராக இருக்கவேண்டும் என்று நினைகிரர்களா? இல்லை ! மாறாக எவ்வளவு தருவார் ? எவ்வளவு செலவு செய்வார்? என்றே நினைகிறார்கள். ஆக எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை பொறுத்தே வெற்றி நிச்சயிக்கபடுகிறது.
பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை, பொருள் உள்ளவருக்கே இவ்வுலகம். பொருள் ஈட்ட ஆள் பலம், இன்னும் பிற தந்திரங்கள், மாற்று வழிகள், கண்கட்டி வேலைகள், வழிபரிகள் தெரிந்து பாதி – தெரியாமல் பாதி, மோசங்கள், ஏமாற்றுக்கள், அபகரிப்புகள் இப்படி பல ஏக இதியதிக்களுடன் யாவற்றையும் நிறை வேற்ற விழையும் போது குற்றப் பின்னணிகள் தவிர்க்கமுடியாத ஒன்று.
ஆக ஆட்சிக்கு வர வேண்டுமானால் பணம் வேண்டும், பணம் வேண்டுமானால் குற்றப் பின்னணியோ, குற்ற முள்ளவர்களின் பலமோ வேண்டும். ஆனால் வருகிறவர்கள், சொல்லும் நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளில் ஒன்று நேர்மையான ஊழல் இல்லா ஆட்சி. இதை சொல்வதற்கே காரணம் இது சாத்தியமற்றது என்று மக்கள் நன்கு அறிவார்கள் என்பது தான். ஆகவே தான் கட்சிகள் வெட்கமே படாமல் தங்கள் வேட்பாளர் பட்டியலில் குறிப்பாக கர்நாடக தேர்தல் வேட்பாளர்களில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் 223 வேட்பாளர்கள் நிறுதப்பட்டிருகிரர்கள் ( மொத்தம் 224 தொகுதிகள் - வேட்பாளர் ஒருவர் மரணித்ததால் ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை ) இவர்களில் 143 பேர் மீது கிர்மினல் வழக்குகள்உள்ளன. காங்கிரஸ் சார்பில் 220 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார் கள் இவர்களில் 91 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில். இதே போல் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்கள் 199. இவர்களில் 70 பேர் மீதும், சுயேட்சை வேட்பாளர்களில் 178 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இப்படி பட்டவர்களின் ஆட்சியில் எப்படி தூய்மை இருக்கும், மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சிறார்களுக் கெதிரான குற்றங்கள், லஞ்சா லாவண்யங்களின் பெருக்கம் என்று எதற்கும் பஞ்சம் இருக்க வாய்ப்பில்லை என்பதை உணரவேண்டும். இந்நிலையில் மக்கள் மனம் மாறினால் ஒழிய மாற்றத்திற்கு வழி இல்லை. மாறுவோம் ! மாற்றுவோம் !!
பாபு தா தாமஸ்