Kaveri Issue and The BJP party
மத்திய அரசா ? மாற்றும் அரசா ?
மத்திய அரசு இந்தியா முழுவதற்குமான அரசு, பொதுவான அரசு. இந்த உண்மையான தன்மையை மறந்து அல்லது மறைத்து செயல் பட்டு கொண்டிருக்கிறது பாரதீய ஜனதா கட்சியின் அரசு. மக்கள் ஏன் பா ஜா கா விற்கு வாக்களித்தார்கள். மாற்றம் வரும், வளர்ச்சி பெறுவோம், முன்னேற்றத்திற்கான பாதை வகுப்பார்கள் என்ற கனவுகளோடு எதிர்பார்ப்புக்களோடு தான் மக்கள் வாக்களித்தார்கள். நிலைமை என்னவோ தலை கீழ் தான்.
பா ஜா கா சுயநலமாய் சிந்திக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மக்கள் இதை உணர்திருக்கிரர்கள் என்பதையும் கட்சி மேலிடம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. இதை மறைக்க தான் அரசியல் சித்துவிளையாட்டுக்களில் மக்கள் கவனத்தை திசை திருப்ப பலவிதமான பிரிவினை வாதப்போக்கை கட்டவிழ்த்திருக்கிறது. இதை உணராத பெரும்பாலானோர் இப்படிப்பட்ட நிகழ்வுகளை தங்கள் போக்கிற்க்கு ஏற்ப ஊதி பூத கரமாக்கி குளிர் காய்ந்துக்கொண்டிருப்பதும் பரவலாக நடந்துக்கொண்டுத்தான் இருக்கிறது.
உண்மையில் என்னத்தான் நடக்கிறது என்று சற்று உற்று கவனித்தால் தெளிவாகப்புரியும். உதாரணத்திற்கு காவிரி விவகாரத்தை எடுத்துக்கொள்வோம், இரண்டு மாநிலத்திற்க்குமான தண்ணீர்ப் பிரச்சனை பல வருடங்களாக நீடித்தது வரும் தீர்க்கமுடியாத ஒன்று. இது போன்று பல பல பிரச்சனைகள் இருந்துக்கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரியும்.
இந்த சுழலில் தான் பா ஜா கா அரியணை ஏறியது. அரியணையில் அமர்திருப்பவர் குஜராத் மாநிலத்தை நிமிர்த்தியவர் என்று பேசப்பட்டவர். இந்த வல்லவர் கையில் ஆட்சியினை கொடுத்தால் இந்தியாவையும் நிமிர்த்திவிடுவர் என்ற நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டது பா ஜா கா. எப்படி துரோகம் இழைத்தது என்றால் சுய லாபமே பிரதானமாக கொண்டு முழு இந்தியாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று செயல் படுகிறது என்பது தான் உண்மை.
இந்த கூற்றை மனதில் வைத்து, காவேரி பிரச்சனையினை மத்திய அரசு கையாளும் விதத்தை பாருங்கள் தெளிவாகப்புரியும். காவேரி பிரச்சனை உச்சநீதிமன்றம் நேரடி கவனத்தில் வந்திருக்கிறது. நீதிமன்றம் என்பது ஒரு பொதுவான தீர்வுக்கான ஸ்தலமாக பார்க்கும் பட்சத்தில் யாருக்கும் பாதகமில்லாமல் செயல் படுத்துவதென்பது இலகுவானது. உச்ச நீதி மன்றத்தை கட்டி சாதாரணமாக தப்பித்துக்கொள்ள முடியும்.
பா ஜா கா அரசோ அப்படி பார்க்கவில்லை மாறாக இதன் முலம் இரண்டு மாநிலத்திலும் பா ஜா கா வின் ஆட்சி பீடத்திற்கான மார்க்கமாக பார்க்கிறது. இங்கே தான் பா ஜா கா வின் சூழ்ச்சியின் நுட்பம் பார்க்கலாம். உச்ச நீதிமன்ற தீர்வை தவிர்ப்பதின் முலம் கர்நாடக மாநிலத்திற்கு சொல்லும் செய்தி பா ஜா கா கர்நாடக மாநிலத்தின் சார்பில் இருக்கிறது என்று உணர்த்துவது. அதே சமயம் இதன் முலம் தமிழகத்திற்கு சொல்லும் செய்தி என்னவென்றால் நாங்கள் நினைத்தால் தான் எதுவும் சாத்தியம் ஆகவே எங்கள் பக்கம் வாருங்கள் என்பதாகும். இதற்கு ஏற்ப தமிழகத்தில் நடக்கும் பல சம்பவங்களை வைத்து பார்த்தால் காரியத்தின் கடை தொகை புரியும்.
உச்ச நீதிமன்றமே ஆனாலும் பா ஜ கா வின் கைபாவை என்பது இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்ததை அதன் தீர்ப்புக்கள் நமக்கு தெளிவான செய்தியினை வெளிப்படுத்தியிருக்கிறது.
இது மிகவும் ஆபத்தான அணுகுமுறை என்பதை தமிழக மக்கள் மாத்திரமல்ல இந்திய மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான காரியமாகும். இல்லை என்று சொன்னால் இந்தியா எனும் அந்த பெரிய வடிவம் மறைந்துவிடும். நாம் யாரைவேண்டுமானாலும் மன்னிக்கலாம் ஆனால் நம்பிக்கை துரோகியை மாத்திரம் மன்னிக்கவே கூடாது.
சுவி.பாபு தா தாமஸ்