top of page

Change of Era

சரித்திரத்தின் நடு நாயகம் உலக இரட்சகராம் இயேசு கிறிஸ்து

புதிய தமிழக பள்ளி பாட திட்டத்தில் கிறிஸ்துவுக்கு முன் ( கி .மு ) கிறிஸ்துவுக்கு பின் ( கி .பி ) என்று வரலாற்று கால அளவு நிலையை மாற்றி பொது ஆண்டுக்குப்பின் ( பொ .ஆ .பி ) பொது ஆண்டுக்கு முன் ( பொ .ஆ .மு ) என்று குறிப்பிட்டு வெளியிட்டிருப்பது வருந்த கூடிய அவலம்.

பல நூறு ஆண்டுகளாக பல் வேறு வல்லுனர்கள் சரித்திர ஆய்வாளர்கள் வரலாற்று சான்றுகள் அடிப்படையில் வழக்கத்தில் கொண்டுவந்த ஆதாரத்தை மாற்றி இருப்பது அறிவீனமான செயலாகும். இதற்கு மிகபெரிய விலையை கொடுக்கவேண்டும் என்பது திண்ணம்.

கிறிஸ்து ஒரு மதம் சார்ந்தவரோ அல்லது ஒரு பகுதியை சார்ந்தவரோ அல்லது ஒரு பிரிவினரை சார்ந்தவரோ இலர். இயேசு கிறிஸ்துவானவர் உலக மக்களை மீட்க வந்த உலக இரட்சகர். இவருடைய போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழி நடப்போரை கிறிஸ்தவர்கள் என்று சமுதாயம் தான் அடையாளப்படுத்தியது. இயேசு கிறிஸ்து சமயத்தை ஸ்தாபிக்க வந்தவரல்ல, மாறாக வழிகாட்ட வந்தார். இவர் சரித்திர நாயகர் ஆகவேதான் சரித்திர வல்லுனர்கள் சரித்திரத்தை இரண்டாக பகுத்து கிறிஸ்துவுக்கு முன் என்றும் பின் என்றும் குறித்தார்கள்.

இயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தியை அறிவிக்கவந்த தேவதூதன் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இரவிலே தங்கள் மந்தையை காத்துக்கொண்டிருந்தபோது அவர்கள் முன் தோன்றி “ பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன், இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவிதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்றான். லூக் : 2 : 1 0 – 11.

இயேசு கிறிஸ்து வின் பிறப்பு இப் பூ உலகிற்கு நற்செய்தியாகும். அவர் உலகிற்கு ஒளியாக வந்தார். “ உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” யோவான் : 1:9.

மறு நாளிலே யோவான் இயேசு வை த் தன்னிடத்தில் வரக் கண்டு : இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி, எனக்கு பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர் தான். யோவான் : 1 : 2 9 -3 0. என்று யோவான் ஸ்நானகன் இயேசுவை அறிமுகம் செய்தார் என்று காண்கிறோம்.

இன்னும் பிற சான்றுகளையும் பார்போம்.

குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுருபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால், அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும் கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோசெயர் : 1 : 14 – 16

நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது ; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம் ; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார். ஏசாயா : 5 3 : 5 -6

சாட்சிகள் :

சமாரியரின் சாட்சி : அந்த ஸ்திரீயை நோக்கி : உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். யோவான் : 4 : 42

இயேசு கிறிஸ்துவின் சாட்சி : அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு : 1 0 : 45

உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் திர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கபடுவதற்காகவே அவரை அனுப்பினர். யோவான் : 3 : 1 7

அப்போஸ்தலர் யோவானின் சாட்சி : பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினார் என்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். I யோவான் : 4 : 14

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். I யோவான் : 2 : 2

சாட்சிகளும் சான்றுகளும் இவ்வாறிருக்க அவரை மதத்தின் பெயரால் சிறுமை படுத்துவது அடாதசெயல் ஆகும். இழைக்கப்படும் அநீதிகளுக்கு முற்று புள்ளி வைப்போம். வாழ்க வையகம், ஆமென்.

சுவி.பாபு தா தாமஸ், இராணிப்பேட்டை

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page