top of page

Open Door

இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்ட மாட்டான் . வெளி : 3 : 8

Behold, I have set before you an open door, which no one is able to shut, Rev : 3 : 8

ஆண்டவருடைய ஊழியமானது நமக்குமுன்பாக எப்போதும் திறந்தே இருக்கிறது. ஊழியம் என்பது ஒழுக்கம், ஒழுங்கு சம்பந்தப்பட்டதாகும். பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது ; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது. எரேமியா : 4 : 23. I looked on the earth, and lo, it was waste and void; and to the heavens, and they had no light. Jeremiah : 4 : 23.

கர்த்தர் ஒழுங்கில்லாததை ஒழுங்கு படுத்துவதையும் வெறுமையாய் இருப்பதை நிரப்புவதையும் பார்க்கிறோமே, அவ்வாறே ஊழியம், எல்லா காலங்களுக்கும், நிலைகளுக்கும் உரியது. ஒழுங்கற்றதை சிராக்குவது அவசியம். தொடர்ந்து நடைபெறவேண்டிய தொடர்பணி.God’s work is not a seasonal business or occasional duty, but an all time work. A tailor made, can suit to fit the need and the situation. It’s a team work. அனைவரும் ஒன்றிணைந்து ஒருமனப்பட்டு செய்ய வேண்டிய உன்னதமான உயரிய பணியாகும்.

அதே நேரத்தில் ஊழியம் என்பது பொதுநலம் சார்ந்த ஒன்று. பிறர் நலம் நாடுவது தான் ஊழியமாகும். சுயநலம் மேலோங்கும் போதுதான் ஊழியம் தடை படுவதையும் வாசல் அடைப்படுவதையும் நாம் உணரமுடியும். அது வரையில் ஊழியத்தில் தடை என்பதை நாம் பார்க்கவேமுடியாது. காரணம் இது அன்றாட அத்தியாவசியமானது essential service என்பதாகும்.

மோசேயின் காரியத்தில் இதுதான் நடந்தது.இஸ்ரவேல் மக்களுக்காக அவர்கள் மீறுதல்கள் நிமித்தம் கர்த்தரிடத்தில் “ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருள்வீரானால் ; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்” என்றான். யாத்திராகமம் : 32 : 32. “But now, if thou wilt forgive their sin – and if not blot me, I pray thee, out of thy book which thou hast written”. Exodus : 32 : 32

இத்தன்மை மோசேயின் வாலிபப்பருவதிலேயே வெளிப்பட்டது. ஆகவே தான் ஆண்டவரே சான்று கொடுக்கிறார் என் தாசனாகிய மோசேயோ அப்படிபட்டவன் அல்ல, என் விட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். எண்ணாகமம்: 12 : 7. Not so with my servant Moses; he is entrusted with all my house, Numbers : 12 : 7. இதற்கு தெளிவான அர்த்தம் என்னவென்றால் தேவகாரியங்கள் அனைத்தையும் அறிந்தவர் மோசே என்று பொருள். இத்தகைய சிறப்புக்குரிய மோசே ஒரு காலகட்டத்தில் தேவப்பணியினை பாரமாக கருதினார். அவர் வாழ்த்த சூழ்நிலை அவரை அப்படி நினைக்க வைத்தது.

ஆகவே மோசே ஆண்டவரை நோக்கி, இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துக்கொண்டு போவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ ? இவர்களை பெற்றது நானோ ? எண்ணாகமம் : 11 : 12. Did I conceive all this people? Did I bring them forth, that thou shouldst say to me. ‘carry them in your bosom,’ as a nurse carries the sucking child, to the land which thou didst swear to give their fathers. Numbers : 11 : 12

எனவே தான் மோசே தன் பணியினை நிறைவு செய்ய யோர்தானை கடக்கக் கூடாமல் போயிற்று. பின்னாளில் மோசே அந்த நல்ல தேசத்தில் பிரவேசிக்க கூடாமல் கண்களால் மாத்திரம் பார்த்ததாக வேதத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலைகளையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று கேட்டுக்கொண்டேன். கர்த்தரோ உங்கள் நிமித்தம் என் மேல் கோபம்கொண்டு, எனக்கு செவிகொடாமல், என்னை நோக்கி : போதும் இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேசவேண்டாம். உபாகமம் : 3 : 25-26. ‘Let me go over, I pray, and see the good land beyond the Jordan, that goodly hill country, and Lebanon.’ But the Lord was angry with me on your account, would not hearken to me ; and the Lord said to me, ‘ Let it suffice you : speak no more to me of this matter, Deuteronomy : 3 : 25-26.

ஒரு தேர்ந்த தேவ மனிதருக்கே இந்நிலைமை என்று பார்க்கும்போது ஊழியத்தை எத்தனை ஜாக்கிரதையோடும், உணர்வுபூர்வமாகவும் செய்ய வேண்டியதின் அவசியத்தை புரிந்துக்கொள்ளுவது சாலவும் நன்று.

இதற்காகவே வார்த்தையானது நமது கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வார்த்தைக்கு சத்திய வார்த்தை என்று பெயர். சாத்தியம் என்றால் உண்மை, நிஜம், இதற்கப்பால் வேறு எதுவும் இல்லை, தெளிவு இப்படி பல பொருள் படும். அப்படியானால் இந்த உண்மையில் என்ன இருக்கிறது என்று பார்ப்போமானால், வாழ்க்கையின் இரகசியம் இருக்கிறது. வாழ்வின் இரகசியத்தை அனைவரும் அறியசெய்வதும் அதின் படி நடக்க பழக்கவிப்பதுவுமே ஊழியமாகும். அப்படி பட்ட தேவப்பணிக்கு தடை என்று எதுவும் வருவதில்லை எந்நாளும் எக்காலத்திலும்.

ஊழியர்களின் வெற்றிக்கு ஒரே வழி தடை கற்களை படி கற்களாக மாற்றும் தேவனை சார்ந்து பயணிப்பதே. அப்படி பயணிக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே, ஆமென்.

சுவி . பாபு தா தாமஸ்

__________________________________________________________________________________

Evg.Babu.T.Thomas, Founder President / Our Shepherd’s Voice Foundation, Ranipet – 632 401, Tamil Nadu, India : https: ourshepherdsvoice.wixsite.com/mysite : Face Book : Our Shepherd’s Voice : You Tube / ourshepherdsvoice : +91 98423 23428, 9486863428, 8056700213,

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page