top of page

My House

என்னுடைய வீடு ஜெப வீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர் குகையக்கினீர்கள் என்றார். லூக்கா : 19 : 46

“It is written, ‘My house shall be a house of prayer’ but you have made it a den of robbers.’’ Luke : 19 : 46.

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மத்தேயு : 5 : 14. நாம் உலகத்துக்கு வெளிச்சமாய் இருக்கிறோம் என்றாரே, என்ன வெளிச்சத்தை உலகிற்கு காட்டுகிறோம், உலகிற்கு நம்முடைய அநியாயங்களும் அநீதிகளும், அராஜகங்களும், தூய்மை கேடுகளுமல்லவா நாம் நம்முடைய பங்களிப்பாக உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறோம்.

பாவியாக ஒருவன் திருசபைக்குள் வரலாம், ஆனால் அவன் பாவியாகவே தொடர்ந்து வாழமுடியாது. அதற்காகதான் திருசபைகள் எழுப்பப்பட்டன. தனிமனித மனமாற்றம், சமுதாய மனமாற்றம், இது தான் திருசபைகளின் கோட்பாடும் நோக்கமுமாகும். இந்த பரந்த நோக்கத்தை உணராதவர்கள் எப்படி திருபணிகளிலும் திருசபை நிர்வாகப்பொருப்புகளிலும் பங்கெடுக்கமுடியும்.

அன்பே வடிவானவர் விற்றிருக்கும் திருசபைகளில் ஊழல், துப்பாக்கி, வீச்சருவாள் கலாச்சாரம் எப்படி நுழைந்தது. ஆவியானவர் அருளிய வார்த்தைகள் சபை களில் போதிக்கப்படவில்லையா? அல்லது வார்த்தைகளை கேட்ட நாம் அதன்படி நடக்க தவறியதாக அல்லவா பொருள். வருடா வருடம் திருசபைகளில் குருத்தோலை ஞாயிறு அனுஷ்டிக்கிறோம். இதன் தாற்பரியம் தான் என்ன? இயேசு கிறிஸ்து இராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எதை நமக்கு குறிப்பால் உணர்த்தினார்?

இயேசு கண்ணீர் விட்டாரே! எச்சரித்தரே !! சுத்திகரிப்பு செய்தாரே !!! இவைகளெல்லாம் நம்மை எச்சரிப்பதற்கும் ஜாக்கிரதைப்படுவதற்குமல்லவா.

நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவ வசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருக்கவேண்டும் (அப்போஸ்தலர் : 6 : 4) என்று மேய்ப்பர்களுக்கும், பரிசுத்த ஆவியும், ஞானமும் நிறைத்து, நற்சாட்சி பெற்றிருக்கிறவர்களாக ( அப்போஸ்தலர் : 6 : 3 ) திருசபை நிர்வாக பணிக்கென்றும் இரு சராருக்கான தன்மைகளாக கொடுக்கப்பட்டிருக்கும் போது இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அங்கத்தினர்களின் கடமையாகும் அல்லவா.

ஒரு குறிப்பிட்ட விழுகாடு அங்கத்தினர்கள் செய்யும் தவறு என்று பெருவாரியான உறுப்பினர்கள் அலட்சியமாய் இருக்கமுடியாது. மாறாக இழி செயல் முழு சபையையும் பாதிக்கும் என்று உணரவேண்டும், செயல் படவேண்டும். முழு உலகத்தையும் ஆதாயப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருக்கும் நாம், சகோதரருக்குள் இருக்கும் களைகளை அகற்றாமல் இருப்பது எப்படி.

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய் பாவஞ்செய்கிறவர்களாய் இருந்தால், பாவங்களின் நிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயதிர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளை பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும், எபிரெயர் : 10 : 26 -27. ஆகவே முயன்றால் முடியும். கரையற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவோம். அவருடைய நாமம் வீணிலே வழங்கப்படாமல் பார்ப்பதற்கு நம் நடைகளை காத்துக்கொள்ளுவது அவசியம்.

சுவி. பாபு தா தாமஸ்

Evg.Babu.T.Thomas, Founder President, Our Shepherd’s Voice Foundation, Ranipet – Tamil Nadu, India. https://ourshepherdsvoice.wixsite.com/mysite + 91 9842323428, 9486863428, 8056700213.

 
Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by COMMUNITY CHURCH. Proudly created with Wix.com

  • Twitter Classic
  • c-facebook
bottom of page