Word speaks about a Women
அவளுடைய பாவங்கள் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார். வெளி : 18 : 5
யாருடைய பாவம் வானபரியந்தம் எட்டினது என்பதையும், யாருடைய அநியாயத்தை தேவன் நினைவுகூர்ந்தார் என்றும் பார்க்கவேண்டுமானால் நாம் 7 & 8 ஆம் வசனங்களை ஆராய்ந்தால் விடை கிடைக்கும்.
அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்: நான் கைம்பெண்ணல்ல. நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும் ; வெளி : 18 : 7- 8.
செல்வமாய் வாழ்வதென்பது வேறு செல்வச்செருக்காய் வாழ்வதென்பது வேறு. அதேபோல ராஜஸ்திரீயாய் இருப்பது வேறு ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன் என்பது வேறு. மாத்திரமல்ல இன்னுமொரு மிக முக்கியமான குறிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது நான் கைம்பெண்ணல்ல என்ற வார்த்தை. கைம்பெண் என்றால் விதவை என்று பொருள். உலகம் தன்னை குறித்த பிம்மத்திலிருந்து மாற்று உருவகத்தை மக்கள் மனதில் பதிவு செய்ய தன் பெயருக்கு முன்னால் செல்வி என்னும் சொற்றொடரை பயன்படுத்தியவர். சரி இப்போது நாம் ஓரளவிற்கு ஊகித்திருக்க முடியும்.
ஒருவர் வைத்து உபயோகித்த பொருட்களை வைத்தே அவர் செல்வச்செருக்காய் வாழ்ந்தாரா? இல்லையா ? என்கிற முடிவுக்கு வந்துவிடமுடியும். பட்டு புடவைகள் மட்டும் 10,500, காலணிகள் 750 ஜோடிகள், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள், ஆயிரம் ஆயிரம் ஏக்கர் நிலங்கள், தேயிலை எஸ்டேட்கள், தோட்டங்கள் இருபத்தைந்துக்கும் அதிகமான விலை உயர்ந்த கார்கள், சொகுசு பங்களாக்கள் அவைகளுக்குள் வசதிகள் ஏராளம் என்று பட்டியல் மிக மிக நீளம்.
இவர் ராஜஸ்திரீயாய் விற்றிருந்த தோரணையே அலாதியானது. இருபதுக்கும் அதிகமான வாகனங்கள் புடை சூழ வீதி உலா நாயகி இவர். விண்ணில் பறந்தாலும் நகர போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவிற்கு இவர் பிரசித்தம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். நிமிர்த்த நடையும் நேர்கொண்ட பார்வையும் ஒரு ஆணுக்கு அழகு. ஆனால் அதை துறக்க துணிந்தவர்கள் தான் இவர் அவையில் முன்னுக்கு வந்தார்கள். இதனால் கிட்டிய பலா பலன்களினால் ஈர்க்கப்பட்டு போட்டிப்போட்டுக்கொண்டு புதுப்புது வடிவங்களை எடுத்து, கவர்ந்து, அவரால் மெச்சிக்கொள்ளப்பட்டு பலன் அடைந்தோர் ஏராளம்.
மண்டிட்டோரை பார்த்து கண்ட சுகம் யாவரையும் அப்படி பார்க்க வைத்தே பழகி போன வழக்கம். தர்மம் விழுந்து அதர்மம் தழைத்தது. எதிர் பேச்சிற்கு வாய்ப்பில்லை. ஒருவரை திருப்பதி செய்வதில் முழு அரசு எந்திரமும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தது. இதில் மனித நேயமும் அரசியல் நாகரிகமும் தொலைத்தே போனது.
1951-ல் நடந்த நாட்டின் முதல் பொது த் தேர்தல் தொடங்கி ஆட்சி அதிகாரத்தை காப்பாற்ற பல்வேறு கட்சிகள் களமிறங்கின. அரசியலிலும் தேர்தல் களத்திலும் எதிர்ரெதிர் முனைகளில் நின்றாலும், கொள்கைகளில் வேறுபட்டு இருந்தாலும், பொது இடங்களில் சந்தித்துக்கொள்ளும் தலைவர்கள் நட்புடன் பழகி வந்தனர். மாற்று கட்சியினரின் இல்ல விழாக்களில் கலந்துக்கொள்வது, எவ்வித வேறுபாடும் இல்லாமல் நட்பு பாராட்டுவது எங்கும் வழக்கமாக இருந்த ஒன்று, குறிப்பாக தமிழகத்தில் நீக்கமற நிலவிய வழக்கம்.
பெரியாரும், ராஜாஜியும் கொள்கை ரீதியாக எதிரிகள். இருவரும் தங்கள் கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துக்கொண்டதில்லை. ஆனாலும் பெரியார் – ராஜாஜி இடையேயான நட்பு இன்றளவும் பேசப்படுகிற ஒன்று. காமராஜர் முதல்வராக இருந்த போது அவரை எதிர்த்து அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் அரசியல் களத்தில் நின்றப்போதும், பொது இடங்களில் காங்கிரஸ் – தி மு க தலைவர்கள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் பழகிவந்தனர். அண்ணாவும், கருணாநிதியும் காமராஜருடன் நெருங்கிய நட்பில் இருந்தனர். அது போலவே ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியன் போன்ற காங்கிரஸ் 2 ஆம் கட்ட தலைவர்களும், நெடுஞ்செழியன், க.அன்பழகன் போன்ற தி மு க வின் 2 ஆம் கட்ட தலைவர்களும் அரசியலில் கடுமையாக மோதிக்கொண்டாலும் மற்றப்படி நண்பர்களாகவே இருந்தனர்.
1967 ல் முதல்வரான அண்ணாவும் எதிர்க்கட்சிகளை நட்புடனே அணுகினார். 1969 ல் கருணாநிதி முதல்வரானதும் காமராஜர் போன்ற தலைவர்களை கடுமையாக விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்தார். ஆனால் தி மு க வில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் 1972 ல் அதிமுக வை தொடங்கியதும் காட்சிகள் மெல்ல மாறத் தொடங்கின, என்றாலும் கருணாநிதி – எம் ஜி ஆர் இடையே நாகரிகமான நட்பு தொடரவே செய்தது.
எம் ஜி ஆர் மறைவுக்குப் பிறகு 1989 பேரவைத் தேர்தலில் தி மு க ஆட்சியை பிடித்தது. ஜெயலலிதா எதிர்க்கட்சி த் தலைவரானார். எதிர்க்கட்சியை உண்மையிலேயே எதிரி கட்சியாக பார்க்கும் கலாச்சாரம் மெல்ல உருவாகத் தொடங்கியது, காரணம் அக் காலகட்டத்தில் அதிமுகவில் நிலவிய உட் கட்சி பூசல். இது 1991 ல் ஜெயலலிதா முதல்வரானதும் உச்சத்தை அடைந்தது. தி மு க தலைவர் கருணாநிதியை ஜெயலலிதா எதிரியாகவே பார்த்தார். ஜெயலலிதா எண் ஒன்று என்றால் மற்றவர்கள் அனைவரும் பூஜியம் எனும் நிலைப்பாட்டில் இருந்தவர்கள் தலைவி வழியே தெய்வ செயலாக கருதி கடைபிடித்தார்கள். இதற்கு முத்தாயிப்பாய் சொல்லவேண்டுமானால் ஜெயலலிதா இருந்தபோது மக்களவை துணை தலைவர் மு.தம்பிதுரையின் மகளுக்கும் காங்கிரஸ் முன்னாள் எம் எல் ஏ வேலூர் ஞானசேகரன் மகனுக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தை தலைமை ஏற்று நடத்தி வைக்குமாறு குடும்ப சகிதமாக தலைவியிடம் சென்று வேண்டிப்பார்த்தார்கள். அம்மையார் கட்சி கொள்கை என காரணம் காட்டி மறுத்துவிட்டார். மகள் திருமணம் என்றாலும் பதவி பறிபோகும் என பயந்து தம்பிதுரை தன் மகள் திருமணத்தில் பங்கேற்க்கவில்லை. அந்த அளவிற்கு தமிழகத்தில் அரசியல் நாகரிகம் மிக மோசமான நிலையில் இருந்தது, ஜெயலலிதா இருக்கும் வரை. ஆனால் கடந்த 2016 செப்டம்பர் மாதம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு காட்சிகள் மாறத் தொடங்கின. ஆக காழ்ப்புணர்ச்சி அரசியல் ஜெயலலிதாவில் துவங்கி ஜெயலலிதாவில் முடிந்தது தமிழகத்திற்கு நல்ல காலம் பொறக்கும் என்பதற்கு அடையாளமே. இப்போது கட்சி பாகுபாடற்ற நட்பு ரீதியிலான அணுகுமுறைகளை தாராளமாகவே பார்க்க முடிகிறது மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இது ஒரு முகம் என்றால், மறு முகம் இன்னும் ஆபத்தானது.
ஆக ஒரு ருபாய் சம்பளம் வாங்குகிறேன் பேர்வழி என்னும் முகத்தை மக்களுக்கு காட்டி திரைக்குப்பின்னால் மாநிலத்தையே விழுங்க செய்த சதி அம்பலத்திற்கு வர, அதை முறியடிக்க எடுத்த பிரம்மா பிரயத்தனம் 18 ஆண்டுகள் கடந்தாலும், தனி நீதிமன்ற நீதிபதியால் ருபாய் 100 கோடி அபராதம் மற்றும் 4 ஆண்டுகள் சிறை என்ற தீர்ப்பையும் மீறி, தனது பரந்துபட்ட அரசியல் செல்வாக்கால் உயர் நீதி மன்றம் முலம், குறுகிய காலத்தில் திர்ப்பு மாற்றப்பட்டு நிரபராதியாய் வெளியே வந்தார்.
இதனிடையில் மக்களின் முழு கவனமும் வழக்கை சுற்றி இருக்கிறது என்பதை கருத்தில் கொண்ட அதிகார வர்க்கம் வேறு வழி இன்றி உச்சநீதிமன்றம் வரை வழக்கை எடுத்துச் சென்று, அரசியல் ஆதாயம் கருதி நீண்ட விசாரணைக்குப்பின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இத்துணை தகிடுதத்தம் அனைத்தையும் அறிந்தவர் சொல்லுகிறார்,
அவள் தன்னை மகிமைப் படுத்தி செல்வச்செருக்காய் வாழ்ந்தது எவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் ( நோயையும் ) துக்கத்தையும் ( வேதனையையும் ) அவளுக்கு கொடுங்கள். 75 நாட்கள் கொடுக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் அக்காலத்தில் என்ன நடந்தது என்பது இன்றளவும் மர்மமே. நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன், தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்க்ஹா அவர்கள் தீர்ப்பு வாசிக்கையில் அப்போது ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருக்கிறார். நான் கைம்பெண்ணல்ல – நான் விதவை அல்ல என்று அவர் தன் பெயருக்கு முன்னால் செல்வி என்று வெளிப்படுத்தினாலும் அவர் கடந்த கால வாழ்க்கை ஆதாரத்தோடு இருப்பது மாத்திரமல்ல அவர் வாழ்க்கைக்கு ஆதாரமான வாரிசின் வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
நான் துக்கத்தை காண்பதில்லை என்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். தனி நீதி மன்ற தீர்ப்பிற்கு பின் நடந்த அரசியல் சித்து விளையாட்டு அனைத்தும் உலகம் அறியும். உச்சநீதி மன்ற தீர்ப்பு முதல் ஆர் கே நகர் தொகுதி வெற்றி, மீண்டும் முதலமைச்சர் அரியணை, உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைப்பு வரை அனைத்தும் இதில் அடங்கும்.
அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை த் தேவன் நினைவுகூர்ந்தார். நாம் ஒரு வேளை சும்மா இருந்துவிடலாம், ஆனால் அவளுக்கு நியாயத்திர்ப்பு க் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர், ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும். சாவு என்பது அனைவருக்கும் ஒரு முறைதான் இவ்வுலகில். அப்படியானால் ஒரே நாளில் என்ற வார்த்தைக்கு நிச்சயம் அர்த்தம் உண்டு. டிசம்பர் 5 ஆம் நாள் மாலை 5.30 மணிக்கு மரணித்தார் என்ற செய்தி வெளியானது அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது, ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் அவர் உயிருடன் இருப்பதாக செய்தி. இரவு 11.30 மணிக்கு மரண செய்தி இறுதியாக வெளிவந்தது. ஆக ஒரே நாளில் என்பது இதன் முலம் நிருபணமாகிறது, ஒரு வேளை 12.0 மணிக்குமேல் அறிவிப்பு வெளிவந்திருக்குமானால் நிச்சயம் மறு நாள் கணக்கில் வந்திருக்கும். ஆனால் கர்த்தருடைய வாக்கு, வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மத்தேயு : 24 : 35
சுவி.பாபு தா,தாமஸ்
Evg.Babu.T.Thomas, Founder President : Our Shepherd’s Voice Foundation, 5/43, Teacher’s Colony, Ammoor Road, Ranipet – 632 401, Vellore District – Tamil Nadu, India. +91 9842323428, 9486863428, 8056700213.https://ourshepherdsvoice.wixsite.com/mysite email : ourshepherdsvoice@gmail.com.