Christianity is a way
தமிழாற்றுப் படை கால்டுவெல் : திராவிட முகவரி கவிஞர் வைரமுத்து அவர்களின் சொல்லாளுமை நிறைந்த ஆய்வுக் கட்டுரை இந்து தமிழ் கருத்துப் பேழையில் இடம் பெற்று இருந்தது மிக அருமை. மிகவும் சிறப்பு மிக்க வரலாற்று உண்மைகளை வெளி கொணர்வதென்பது கடினமான பணியாகும். அதிலும் அவருக்கே உரிய மொழி நடையில் வரலாற்று சான்றுகளோடு பதிவு செய்வதென்பது வைரத்திற்கு பட்டை திட்டுவதற்கு சமம். இக் கடினமான பணி வைரத்தில் முத்து பதியப்பெற்றவற்கே தகும்.
ஆனால் இத்துணை கடினமான ஆய்வுகளை, படைப்புகளை படைப்பவர் எப்படி கால்டுவெல் சமயம் பரப்ப வந்தார், ராபர்ட் டி நொபிலி கிறிஸ்துவ மதம் பரப்பியவர் என்று எழுதினார் என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. கவிஞர் வைரமுத்து என்பவர் நுண்னாய்வு செய்யும் ஆற்றல் மிக்கவர். அவரால் எப்படி இவ்வளவு பெரிய பிழை செய்யா முடியும்.
கிறிஸ்தவம் என்பது மதமோ சமயமோ அல்லவே அல்ல. கிறிஸ்தவம் மார்க்கம் மட்டுமே. வந்தவர்கள் எல்லாம் மார்க்கம் காட்டவே அல்லது வழி காட்டவே வந்தார்களே ஒழிய மதம் பரப்பவோ சமயம் போதிக்கவோ வரவில்லை. கிறிஸ்துவத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை.
இயேசு கிறிஸ்து சொன்னார் “ நானே வழி, சத்தியம், ஜிவன் “ யோவான் 14 : 6. கிறிஸ்துவும் மதம் போதிக்க வரவே இல்லை. அப்படி இருக்கும் போது அவர் வழி வந்தவர்கள் எப்படி சமயம் பரப்பவோ மதம் பரப்பவோ வந்திருக்க முடியும். இத்துணை பெரிய பிழையை வைரமுத்து எப்படி செய்தார் என்பது வியப்பாக இருக்கிறது.
நன்றி, வணக்கம்
சுவி.பாபு தா தாமஸ்