We want justice
- Evg.Babu.T.Thomas
- Sep 5, 2018
- 1 min read
“பாசிச பா ஜ க அரசு ஒழிக – சோபியா”
BJP MLA promises to ‘kidnap’ girls – Ram Kadam was speaking at a Dahi Handi festival – The Hindu ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி எம் எல் எ திரு.ராம் கதம் மும்பை காட்கோபர் மேற்கு சட்டமன்ற தொகுதியை சார்ந்தவர் கடந்த திங்கள் இரவு தஹி ஹண்டி எனும் திருவிழாவில் கலந்துக்கொண்ட மக்களிடம் குறிப்பாக வாலிபர்கள் மத்தியில் விரும்பத்தகாத கேவலமான அவமானகரமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறார்.
அவர் அங்கு குழுமி இருந்த வாலிபர்களை பார்த்து “நீங்கள் எந்த பெண்ணுக்காவது உங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தும் அப்பெண் அதை நிராகரித்திருக்கும் பட்சத்தில், உங்கள் பெற்றோறோடு என்னிடத்தில் வந்தால், உங்கள் பெற்றோருக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில் அப்பெண்ணை நானே கடத்தி வந்து உங்களுக்கு கொடுப்பேன் என்று பொது இடத்தில் மக்கள் திரள் குழுமி இருக்கும் பொது வெளியில் இப்படி ஒரு அபாயகரமான வக்குறுதியினை மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் எதிர்ப்பு வலுக்கவே “ நான் காமிடியாக பேசியதை தவறாக புரிந்துக்கொண்டார்கள், யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு போய் விட்டார். மக்கள் பிரதிநிதி எதை வேண்டுமானாலும் பேசலாம் காமிடிக்காக சொன்னார் என்று மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். சட்டமும் ஒழுங்கும் கண் முடி, வாய் பொத்தி, காதடைத்து, கை கட்டி அமைதி காக்கும்.
சோபியா போன்றவர்கள் பொது வெளியில் “ பாசிச பா ஜ க அரசு ஒழிக “ என்று கோஷமிட்டால் உடனே அரசும், நீதி துறையும் காவல் துறையும் தன் கடமையை செய்யுமா? இதே விரியம் S.Ve. Sekar மற்றும் H.Raja போன்றோர் நடவடிக்கைகளில் காணப்படவில்லையே. அப்படியானால் ஏமாந்தவர்கள் என்றால் குனியவைத்து குதிரை சவாரி செய்யுமா அரசு. உங்களின் ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு செய்கையே சோபியா போன்றோரின் எழுச்சிக்கு காரணம்.
குற்றம் புரிபவரை பார்க்கிலும் குற்றம் செய்ய துண்டுபவரே அதிக தண்டனைக்கு உரியவர். இதை மனதில் கொண்டு அரசு அவன செய்யும் என்று எதிர்பார்ப்போம்.
சுவி. பாபு தா தாமஸ்