Water source !
தண்ணீர் ! தண்ணீர் !! தண்ணீர் !!! வேதம் கூறும் வாக்கு ?
நீர் இன்றி அமையாது உலகு. ஆம், நாம் வாழும் பூமி, பூமியில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இன்றியமையாதது நீர். தண்ணீர் இல்லா உலகம் வனாந்திரம் அல்லது பாலைவனம். வாழ்வுக்கு ஆதாரமற்ற ஸ்தலமே பாலைவனம் போல தண்ணீர் இல்லா உலகும் மாறிவிடும். தண்ணீர் பிரச்னை பெரும் பிரச்னை.தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடும் காலம் இது. மக்கள் தண்ணீருக்காய் ஆளாய் பறக்கிறார்கள்.
பணத்துக்கு தண்ணீர் :
தண்ணீர் விலைக்கு வாங்கும் சூழலை வேதம் அழகாக சித்தரிப்பதை பாருங்கள். எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கி குடிக்கிறோம் ; எங்கள் விறகு விலைக்கிரையமாய் வருகிறது. புலம்பல் 5 : 4
கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு வரும் என்று யாரும் கனவிலும் நினைத்தவர் இல்லை. ஆனால் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்குறோம் எனும் வாக்கு நிறைவேறி இருக்கிறது.
மழையும் மழையின் தன்மைகளும் :
மழையை குறித்து வேதம் தரும் சுவாரசியமான விளக்கத்தை பார்க்கலாம் வாருங்கள். அவர் நீர்த் துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார். அவர் அவைகளுக்குக் கட்டளையடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப் பண்ணுகிறார். யோபு : 37 : 11-12
மழையை குறித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகத்தெளிவாக பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது மழை எத்தனை வகைகள் என்பதையும் பார்போம் வாருங்கள். வேதம் இதற்கும் வெகு தெளிவான விளக்கத்தை நமக்கு தருகிறது.
ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும் அவைகளை வரப்பண்ணுகிறார். யோபு 37 : 13. மழை மூன்று வகைப்படுகிறது என்பது யோபுடைய சரித்திர புத்தகத்தின் மூலம் நமக்கு தெளிவாகிறது 1 . தண்டனை 2 . பூமிக்கு உபயோகமாக 3 . கிருபையாக எனும் வகை படுத்தப்பட்ட மழையை குறித்த விளக்கம் ஆச்சரியத்தை நமக்கு தருகிறது என்பது உண்மையே.
மழையை தருவது யார் :
புற ஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப் பண்ணதக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளை கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர் : ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம் ; தேவரீர் இவைகளை எல்லாம் உண்டுப்பண்ணினிர். எரேமியா 14 : 22
இப்போது நாம் நன்றாக உணர்ந்துக்கொள்ள முடியும் மழையை தருவது யார் மற்றும் மழை வரும் விதம் இன்னும் வகைகள் யாவை என்றெல்லாம் பார்த்தோம். எல்லாம் சரி மழை எப்போது வரும் எனும் கேள்வி அனைவர் உள்ளத்தில் எழுவது சரியே. அதற்கான பதிலையும் வேதம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதையும் பார்போம் வாருங்கள்,
மழை எப்போது வரும் :
1.நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும், சுருபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும் பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக ; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
2.என் ஓய்வு நாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக் குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
3 .நீங்கள் என் கட்டளைகளின் படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு அவைகளின் படி செய்தால்,
நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன் ; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும். லேவியராகமம் : 26 : 1 – 4
இவைகளே வேதம் நமக்கு தரும் மழைக்கான ரகசியங்கள். நாம் இவைகளை பின்பற்றி நம் பூமியும், நம்மையும் வளமாக்கிக்கொள்ளுவோம். ஆங்காங்கே மழைக்காக நடக்கும் சம்பரதாய நிகழ்ச்சிகள் எனும் பெயரில் நடக்கும் அவலங்கள் வேதனையளிக்கிறது. அவைகள் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளிவருகிறது, குறிப்பாக தவளைக்கு திருமணம், கழுதைக்கு திருமணம், வானாந்திரமான இடத்தில பெண்கள் கூடி ஒப்பாரி, வீடு வீடாக சென்று யாசகம் பெற்ற உணவை உண்ணுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை சொல்லலாம்.
இது போன்ற வீணான காரியங்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து சரியான பாதையில் நாம் பயணிக்கும் போது நன்மைகள் நம்மை வந்தடையும் என்பது திண்ணம். மனமாற்றமே மழைக்கு வழி என்பதை உணருவோம். வளமான வாழ்கைக்கு இதுவே வழி, இதிலே நடப்போம். முன்மாரியும் பின்மாரியும் பெற்று நீர் நிலைகள் நிரம்ப செழுமை பசுமை என்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்களுடன் ,
சுவி.பாபு T தாமஸ்