top of page

Tree compassion

ஒரு மரம் பேசுகிறது ! கண்ணீர் குரல் !! நிஜமான சோகம் !!!

நாங்கள் மரம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாங்கள் மரம் தான் உண்மை, ஆனால் நாங்கள் ஜடம் அல்ல. எங்களுக்குள் உயிர் இருக்கிறது. உணர்விருக்கிறது, கடமை தவறாமை எங்கள் கோட்பாடு. இந்த மண்ணுக்கும் மனுமக்களுக்கும் சேவை செய்வது, அதிலும் தன்னலமற்ற சேவையே எங்கள் நீதி. நாங்கள் யாரிடத்திலும் யாசித்து எங்களுக்கு வழக்கமில்லை. எங்களுக்கென்று எந்த கோரிக்கையும் இல்லை. நாங்கள் கொடுத்தே பழகியவர்கள். எங்கள் எஜமானரின் உண்மை சேவகர்கள் நாங்கள். எங்கள் பயன்களை நாங்களே சொல்லும் துரதஷ்டசாலிகள். இந்த பூமியும், பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் எங்களுக்கு இரு கண்கள் போன்றவர்கள். ஆகவே பணிசெய்து கிடப்பதே எங்கள் வாடிக்கை.

சேவை ஒரு பார்வை :

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது உங்களுக்குத் தெரியும். மரம் இல்லா ஊர் பாலைவனம். அந்த பாலைவனத்தையும் பசுமையாக்குவது மரங்கலாகிய நாங்கள் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? மரங்களுக்காகதான் மேகங்கள் பூமிக்கு மழையை பொழிகிறது. பூமியை குளிர்விப்பவர்களே நாங்கள் தான். பச்சைப்பசேல் எனும் அந்த பசுமையான எங்கள் தோற்றமே கண்ணிற்கு குளிர்ச்சியையும் மனதிற்கு இதமான ரம்மியத்தை தருகிறது என்று தங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்ள வருகிறவர்கள் சொல்லி அனேகதரம் கேட்டிருக்கிறோம்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அந்த நிழலை தருபவர்கள் நாங்கள் என்று நாங்களே சொல்லி தெரிய வேண்டுமா என்ன? சாலையின் இருமருங்கிலும் அயராது நின்று சூரியக் கதிர்களின் வெப்ப தாக்குதல்கள் உங்கள் மேனியை தீண்டாத வண்ணம் மெல்லிய இதமான தென்றளையும் வீசச்செய்து பயண அனுபவத்தை சுகமானத்தாக்குவதில் எங்களுக்கினை வேறு யார் ? எங்கள் கழிவுகளும் சருகுகளும் தாவரங்களுக்கு உரமாகவும் பூமிக்கு மண்வளத்தையும் தருவதற்காக மறு சுழற்ச்சி செயல்முறையை பயன்படுத்தி சுத்தமும் சுகாதராமுமாக பூமியை பாதுகாக்கிறோம்.

சிலச் சமயங்களில் இயற்கையில் ஏற்படும் மாறுதல்களால் காற்றின் வேகம், தன் அளவை கடக்கும் பட்சத்தில் அரணாக நின்று சேதம் மிகாமல் தடுக்கும் ஆற்றலார்களாக மரங்கள் செயல்படுகிறது. மழையின் காரணமாக மண் சரிவுகள் பெருமளவில் நடைபெறாவண்ணம் தடுப்பவையும் மரங்களே. ஊர்திகளால் உண்டாகும் இரைச்சல்கள், இடி மின்னல் போன்ற அசாதாரணமான சூழல்களில் இருந்தும் மக்களை காப்பது மரங்கள். மனிதன் உபயோகத்திற்கான மரச்சாமான்கள் துவங்கி, அவன் இறுதி யாத்திரைக்கான விறகாகவும் மரம் பயன்படுகிறது. இது மட்டுமா? உணவுக்காக கனிகளும், ஆரோக்கியத்திற்காக இலைகளும், பட்சி பறவைகளின் சரணாலயமாகவும் மரங்கள் தங்கள் பங்களிப்பை கொடுத்த வண்ணமிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

மரங்களின் மிகப்பெரிய பங்களிப்பாக மனித இனத்தின் ஜீவாதாரமான அவன் சுவாசிக்கும் பிராண வாயுவை மனுகுலத்திற்கும் வழங்குவதாகும். இந்த பிராண வாயுவை கொடுக்கும் கொடையாளியாக மரம் விளங்குகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால் மனிதன் மற்றும் மனித செயல்பாட்டால் வெளியேறும் கரியமில வாயுவை உட்கொண்டு அவனுக்கு தேவையான பிராண வாயுவை கொடுக்கிறது. மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 550 லிட்டர் சுத்தமான பிராண வாயுவை சுவாசிப்பதாக ஒரு கணக்கிடு. வியாபார ரீதியில் குடுவையில் அடைக்கப்பட்ட பிராணவாயுவின் இன்றைய விலை சுமார் Rs.6,500/- ( 2.5 litres of portable cylinder ). அப்படியானால் மேற்க் கூறி அனைத்து சேவையையும் ஒருங்கே கணக்கிட்டு ஒரு ஐம்பது ஆண்டுகள் ஆயுள் கொண்ட மரத்தின் தோராயமான விலை பலக்கோடி களை தாண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இத்துணை இருந்தும் என்ன பயன். எங்களின் பாதுகாப்பிற்கு யாரும் உத்தரவாதம் இல்லை. மிருகங்களுக்கும் கூட குரல் கொடுக்கவும், வழக்கு மன்றம் செல்லவும் அமைப்பிருக்கிறதாம் சொல்லுகிறார்கள். எங்களுக்கோ நாதி இல்லை. வளர்ச்சி என்பது முக்கியம் தான், அதனால் தேவைப்படும் விரிவாக்கம் தவிர்க்க முடியாததே. நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை என்றாலும் தேசிய நெடுஞ்சாலை என்றாலும் மாநில, ஊராக சாலை விரிவாக்கமானாளும் ஈவு இரக்கமின்றி காவு கொடுக்கப்படுவது மரங்கலாகிய எங்களையே.

எங்களுடைய எண்ணங்களும், விருப்பங்களும் இது தான். எங்களுக்குப் பின் எங்கள் பணியை யார் அங்கே தொடரப் போகிறார்கள். இதுவே எங்களின் தலையாயக் கவலை.ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன் ஒரு மரத்தை நட்டு அது ஓரளவிற்கு வளர்ந்தப் பின் நீங்கள் வெட்ட நினைக்கும் மரத்தை வெட்டுவதாக இருந்தால் எங்களுக்கு ஒருரளவிற்காவது ஆறுதல் தரும். ஒரு மரத்தின் பணியை இன்னொரு மரம் நின்று அந்த இடத்தை நிரப்பிவிட்டதே என்ற ஓர் ஆத்மா திருப்தியாகிலும் கொடுப்பீர்களானால் மண்ணும் மனுவும் வாழ்வாங்கு வாழும்.

நன்றி,

சுவி. பாபு T தாமஸ்

இராணிப்பேட்டை

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page