Turn to God the creator
போதையில் மிதக்கும் தமிழகம்
தமிழகம் தடம் மாறி பயணிக்கத்தொடங்கி வெகு காலம் சென்றுவிட்டது. ஏன் இந்த தடுமாற்றமும், தடம் மாற்றமும் என்று உணாரக்கூட இயலாதச் சூழல் தான் வெட்கக்கேடு. ஆதிக்குடி தமிழ் குடி, கல்தோன்றா மண்தோன்றா காலத்து மூத்த மொழி தமிழ் மொழி, ஆண்டப்பரம்பரை எங்கள் தமிழ் பரம்பரை, கடல் கடந்தும் வாணிபத்தில் கோலோச்சியவன் தமிழன் என்ற பல்லவிஎல்லாம் சரிதான். ஆனால் அவனா இவன் என்று சுவடில்லாமல் மாறியவனை தேடுவது தான் எப்போது. “நாங்கெல்லாம் அந்த காலத்திலே” என்ற புளித்தக் கதையை கொண்டு பாலை தயிராக்க முடியாது என்பது தான் இன்றைய நிதரிசனமான உண்மை. இந்த உண்மையை புரியாதவனே போகி. தள்ளாடும் தமிழனை மிட்கவா ! எழுந்து வா! விரைந்து வா !!!
தமிழன் நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பிய சந்திராயன் 2 விக்ரம் லேன்டரை காணவில்லை. குழியில் விழுந்து மீண்ட சிசுவின் உடலில் உயிர் இல்லை இப்படி மண்ணான கதைகள் தான் ஏராளம். ஆனால் இதை கண்டுக்கொள்ளாத நல்ல மனங்கள் தான் இங்கு தாராளம். தமிழன் பார் புகழ் பாடிய காலத்தை மீட் டெடுப்பது தான் எப்போது. தோல்விகள் வெற்றிப் படிகள் தான் சந்தேகம் இல்லை. தோல்விகள் நமக்கு நல்லப்பாடங்களை தரும், அந்தப்பாடங்களால் வரும் தெளிவும், மீட்சியுமே வெற்றியைத் தரும்.
எந்த ஒரு நாட்டின் வெற்றியும் ஒவ்வொரு தனி மனிதனில் இருந்தே துவங்குகிறது. ஒவ்வொரு தனி மனிதனின் வெற்றியும் ஒரு குடும்பத்தின் வெற்றியாகும். ஒவ்வொரு குடும்பத்தின் வெற்றியும் அது சார்ந்த சமூகம், இனத்தின் வெற்றியாகும். இதுவே நாட்டின் வெற்றி. அப்படியானால் ஒவ்வொரு தனி மனிதனின் வெற்றியும் அவன் ஒழுக்கத்தில் இருக்கிறது. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடு
எனும் வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப நம் வாழ்வை சீர் தூக்கி பார்க்க தவறியதே இன்றைய சூழலுக்கு காரணம். அதே வள்ளுவன் கூறும் மற்றுமொரு குரலில் ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’. ஆக ஒழுக்கம் கெட்ட செயல் ஒருநாளும் வெற்றி தராது. அது நிரந்தரமான வெற்றியாகவும் இருக்காது என்பதை நாம் உணரும் வரை நாம் ஜெயிப்பது என்பது காற்றில் சிலம்பம் செய்வதற்கு சமம்.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பது ஊரறிந்த உண்மை. பணமே பாதாளம் வரை பாயும் ஆயுதம். பட்டம், பதவி, அதிகாரம் அனைத்தும் இன்று இங்கு விலைக்கு உண்டு. இது இங்கு இப்படி இருக்க திறமைக்கு தான் வேலை கிடைக்குமா ? அல்லது திறமையை தான் யாராவது வளர்ப்பாரா ? திறமை இல்லாத இடத்தில் தான் வெற்றி சாத்தியமா ? முயன்றால் தான் எதுவும் சாத்தியம். முயற்சிக்கு இங்கு வேலை இல்லை. வெற்றி தோல்வியை பணம் நிர்ணயிக்கும் காரணத்தால் பாகுபாடின்றி பணமீட்ட எல்லோரும் எடுத்த வழிதான் ஊழல். ஊழலே கோலோச்சுகிறது. அடிமட்டம் துவங்கி மேல்மட்டம் வரை எங்கும் எதிலும் ஊழல். இருப்பவனுக்கு போதும் என்ற மனம் இல்லை. இல்லாதவனுக்கும் வரும் என்ற எண்ணமில்லை ஏன் தன்னம்பிக்கை என்பது எவரிடத்திலும் இல்லை. மருத்துவர் சொல்லுகிறார் தன் மகனை எப்படியாவது மருத்துவரக்கவேண்டும், பணம் இருந்தால் முடியும், விட்டதை பன்மடங்கு அதிகம் எடுக்க முடியும் என்று நம்புகிறார். திருட்டு தொழில் பல்லாயிரம் கோடி புழங்க முடியும் என்ற பார்த்துக்கொள்ளுங்கள்.
தீய சக்தியான ஊழலை ஒழித்தால் தான் வழி பிறக்கும். அந்த வழியை அடைய நாம் நம் பண்பாட்டிற்கு திரும்ப வேண்டும். அந்த பண்பாடு நமது வேதங்களில் இருக்கிறது. அந்த வேதங்களில் மறைந்திருப்பவரை தேடுவோம். அவரே நமக்கு வழியானவர். வழி கிடைத்தால் விடை கிடைக்கும், விடை கிடைத்தால் விடுதலை கிடைக்கும், அந்த விடுதலையே நம் இனத்தின் வெற்றி. விழித்தெழு தமிழா ! ஓடு ! தேடு உன் வேதங்களை ! எடு வாளை !! அறுத்தெறி உன் கட்டை !! விடுதலை விடுதலை என்று சங்கே முழங்கு. நாளை நமதே.
வணக்கம் .
சுவி. பாபு T தாமஸ்