The fruit of Good and Evil
Let us all pray! கனியை புசிக்கும் முன் ஆதாம் வாழ்க்கை, கனியை புசித்தப்பின் ஆதாமின் வாழ்க்கை இதை சிந்தித்தாலே நமக்கு அனைத்தும் புரிந்துவிடும். தேவனாகிய கர்த்தர் சொன்னார் நீ தோட்டத்தில் உள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கலாம் ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் ஆதி : 2 : 16 -17 ஆப்படியானால் அதுவரையில் ஆதாமும் ஏவாளும் ஜீவ விருட்சத்தையும் புசித்தார்கள் என்றே பொருள். ஆகவே தான் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். சகல சௌபாக்கியமும் பெற்று வாழ்ந்து வந்தார்கள். அதுவரையில் பூமி தன் பலனை கொடுத்தது, ஏற்ற காலத்தில் நடக்கவேண்டியவை யாவும் நடைப்பெற்றன, மிருக ஜீவன்கள் தன் பங்களிப்பை தந்தன ஏன் ? தேவனாகிய கர்த்தர் மனுஷனை்நோக்கி நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்பி, அதை கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். ஆதி 1: 28. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தோட்டத்தில் ஒரு குறைவும் இல்லை. கர்த்தர் அவர்களோடு இருந்தார். பிள்ளைகள் பெற்றோரின் அரவணைப்பில் எப்படி தேவையான நேரத்தில் தேவையானவைகளை பெற்று வாழ்வார்களோ அப்படி வாழ்ந்தார்கள். நன்மை தீமை கனியை புசிக்காத வரையில் ராஜ வாழ்க்கை. அதற்காகத்தான் அதை புசிக்கவேண்டாம் என்று கர்த்தர் சொன்னார். அதை புசித்தப்பின் இராஜபோக வாழ்க்கை பறிபோனது. தனிக்குடித்தனம் போனக்கதைதான். ஆதி : 3 : 16-19 சொல்வதுப்போல் போராட்டமே வாழ்க்கை ஆனது. குறிப்பாக ஜீவ விருட்சத்தின் கனியை அவன் புசிக்காத்ப்படிக்கு அவ்வழியை கர்த்தர் அடைத்தார். ஆகவேதான் மனுஷனுக்கு ஆயுள் அதள பாதாளத்திற்குப் போனது. மனிதன் இழந்ததை மீட்டுத் தரவே தேவன் மனிதனாக பூமியில் அவதரித்தார். நாமும் இந்த இரகசியத்தை புரிந்துக்கொண்டு வாழ்ந்தால் ஆதாம் வாழ்ந்த அந்த ஆதி வாழ்க்கையை வாழமுடியும். ஜீவ விருட்சத்தின் மேல் நமக்கு அதிகாரம் கொடுக்கப்படும். வெளி 22 : 2, 14. இது தான் இரகசியம். மனம் திரும்புவோம். கர்த்தரை சார்ந்து வாழும் வாழ்க்கையே சிறந்தது. கர்த்தரை சார்ந்து வாழ்வது எப்படி என்பதை தான் முழு வேதாகமமும் நமக்கு போதிக்கிறது. ஆமென் சுவி.பாபு T தாமஸ்