Tithe
Let us all pray! தசமபாகம் என்பது என்ன, நாம் ஏன் ? கொடுக்கவேண்டும். மல்கியா 3:10 சொல்லுகிறது, "என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டக சாலையிலே கொண்டு வாருங்கள் என்றும் வசனத்தின் பிற்பகுதி அதனால் வரும் பலன்களையும் வசனம் நமக்கு தெளிவுப் படுத்துகிறது. இங்கே மூன்று காரியங்களை பார்க்கமுடியும் 1. ஆகாரம் 2. இருப்பு 3. ஆசீர்வாதம் அதாவது ஆகாரமே ஆதாரம் எனும் நம்பிக்கை, அந்த நம்பிக்கை தரும் இருப்பிடமாக தேவ ஆலயம் இருந்தாலே ஆசிர்வாதம் என்று பொருள். நன்றாய் சிந்தியுங்கள் குற்றங்களுக்கு எது காரணம்? ஒரு தேவை அந்த தேவையை பூர்த்தி செய்யாமையே என்று நாம் அறிவோம். இருப்பவன் கொடுப்பான், ஏன்? அது தேவை உள்ளவனுக்கு கொடுக்க. எப்படி ? இருவருக்கும் பொதுவான இடத்தில் என்றால் எது பொதுவான இடம் ? அதுவே ஆலயம். இருப்பவன் ஆலயத்தில் கொடுப்பான், தேவையுள்ளவன் ஆலயத்தில் பெறுவான். இந்த தத்துவத்தை உணர்த்துவதே தசமபாகத்தின் அடிப்படை. இதை புரியாமல் அதற்க்கேற்ப்ப நாம் செயல் படாமல் போனதின் விளைவு தான் ஆத்மா ஆகாரம் தரும் ஆலயங்கள் இடிக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதற்கும் காரணம். இந்த தசமபாகத்தை கொண்டு மூன்று பணிகள் நிறைவேற்றப்படவேண்டும் 1. ஆலயப் பரிபாலனம் 2. ஊழியர்களின் தேவை 3.வரியோர் எளியோர் தேவை சந்திப்பு. இப்படி சிந்திப்போம் அப்படியே செய்வோம். தேவன் மகிமைப்படுவார், தேவ இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும், ஆமென். சுவி.பாபு T தாமஸ்