Baptism
Let us all pray! ஞானஸ்நானம் என்றால் என்ன? ஞானஸ்நானம் என்பது சுத்திகரிப்பின் அடையாளம். பழைய பாவ வாழ்விலிருந்து மனம்திரும்பிய புதிய வாழ்வில் பிரவேசிப்பதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் அனுசரிக்கப்படுகிறது. இதை பழைய ஏற்பாடு காலத்தில் சுத்திகரிப்பாகவே வழக்கத்தில் இருந்தது. ஆகவேத்தான் சுத்திகரிப்பிற்க்காக வெண்கலத்தால் தொட்டியை உண்டாக்கி அதிலே தண்ணீர் வார்த்து ஆசரிப்புக் கூடாரத்திற்க்கும் பலிப்பீடத்திற்கும் நடுவே வைத்தார்கள். யாத் : 30 : 17 - 21 மாத்திரமல்ல இஸ்ரவேல் மக்களை குறித்தும் அவர்கள் ஞானஸ்நானம் குறித்தும் ஞான அர்த்தமாய் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில், எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்று குறிப்பிடுகிறார், I கொரி : 10 : 1-2 எசேக்கியேல் தீர்க்கதரிசியும் பின்னாளில் நடக்கவிருக்கும் ஞானஸ்நானம் குறித்து பதிவு செய்கிறார், எசேக்கியேல் : 36 : 25 - 26. அதேப்போல பஸ்கா பந்தி விருந்தில் இயேசு பேதுருவோடு நிகழ்த்திய சம்பாஷனையையும் இங்கே நினைவுகூர்வது பொருந்தும், யோவான் : 13 : 10 அப்படியானால் இயேசு கிறிஸ்து ஏன் ஞானஸ்நானம் பெற்றார் என்ற கேள்வி வரும். அவர் அதை உலகத்திற்கு மாதிரியாக நிறைவேற்றினார், மத்தேயு : 3 : 15. ஆமென்,. சுவி. பாபு T தாமஸ்.