First Born
முதற் பேறானவர்கள் - சுவி.பாபு T தாமஸ்
முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்ப் பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக. யாத்திராகமம் : 22 : 29.
முதற்பலன் கர்த்தருடையது :
கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்ததையும், உனக்கு இருக்கும் மிருக ஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பயாக. அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள். யாத்திராகமம் : 13 : 12. உன் நிலத்தின் முதல் விளைச்சல்களில் முதற்க் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக, யாத்திராகமம் : 23 : 19. கர்த்தர் நம்மிடம் எதிர்ப் பார்க்கும் ஒரே ஒரு காரியம் நம்முடைய முதற்ப் பலன்களை கர்த்தருகென்று கொடுப்பதாகும். இதில் மிகப்பெரிய இரகசியம் அடங்கியிருக்கிறது. பெரும்பாலும் இதன் முக்கியத்துவத்தை நாம் உணராதிருப்பதே கடைபிடிக்காமல் இருப்பதற்கு காரணம். வேதம் நமக்கு சொல்லும் ஒரு குறிப்பு, கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும், அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். லூக்கா : 6 : 38. இந்த வசனம் பொதுவாக கொடுப்பதை ஊக்குவிக்கும் வார்த்தையாக நாம் பார்க்கிறோம். உண்மைதான் இவ் வசனம் கொடுப்பதை நமக்கு வலியுறுத்துகிறது. ஆனால் நாம் நினைப்பது போல் பொன்னையோ, பொருளையோ, நிலத்தின் விளைவையோ கொடுப்பதை மட்டும் முக்கியப்படுத்தவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தம் முதற்பேறான குமாரனை கர்த்தருக்கென்று கொடுப்பதையே முதன்மைப்படுத்துகிறது என்பதை யாவரும் உணராதது துரதஷ்டமே.
ஆம், முதற்ப்பேறானவர்கள் குடும்பத்தின் ஆசிர்வாதத்திற்க்குரியவர்கள். இது மெய்ப்பட வேண்டுமானால் நாம் அவர்களை கர்த்தருக்கென்று கொடுப்பதால் மட்டுமே சாத்தியப்படும். நான் தேசத்தை அழிக்காதப்படிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். எசேக்கியேல் ; 22 ; 30. ஆக நமக்கு எசேக்கியேல் தீர்க்கனின் வாக்கியம் உணர்த்தும் காரியம் என்னவென்றால் இவ்வாகியத்தின் மூலம் தேவனுடைய ஆதங்கத்தை அது வெளிப்படுத்துவதை காணமுடிகிறது. குடும்பங்களின் கூட்டு தான் தேசம், ஆகவே கர்த்தர் சொல்கிறார் நான் தேசத்தை அல்லது குடும்பத்தை அழிக்காதப் படிக்கு அந்தக் குடும்பத்தின் சார்பில் தேவச் சமூகத்தில் நிற்க ஒருவர் தேவை என்பதையே உணர்த்துகிறது. இந்த வழக்கத்தை ஒரு நிர்வாக ஒழுங்கு முறையாகவும் நாம் பார்க்க முடியும். இதற்கு ஆதாரமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு இரகசியத்தை போகிறப் போக்கில் வெளிப்படுத்துவது எத்தனை பொருத்தம். இந்த சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதப் படிக்கு எச்சரிக்கையாய் இருங்கள். அவர்களுக்குரிய தேவத்தூதர்கள் பரலோகத்திலே என் பிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு : 18 ; 10. அப்படியானால் நம் ஒவ்வொருவர் சார்பாகவும் ஒரு தேவத் தூதரை தேவன் பரலோகத்தில் நியமித் திருக்க நம் குடும்பங்கள் சார்பில் நாம் ஒருவரை நியமனம் செய்வது எத்தனை முக்கியம் என்பதை நாம் உணர்வது மிக மிக அவசியமாகும். ஆனால் நாமோ இது வரையிலும் ஆண்டவருடைய நீதியை புறக்கணித்திருப்பது தெளிவாகிறது அல்லது ஆண்டவர் வகுத்திருக்கும் ஒழுங்கை உணராமல் வாழ்ந்து வந்திருக்கிறோம் என்பதே உண்மையாகும். இதனால் வரும் பலாபலன் அபரிதமானது என்பதை ஆபிரகாமின் வாழ்கையில் வெளிப்பட்டதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
ஆபிரகாமின் கீழ்ப்படித்தல் :
அப்பொழுது அவர் : உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசக்குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்போது அழைத்துக்கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆதியாகமம் : 22 : 2. ஆபிரகாம் தேவனுக்கு மிகவும் கீழ்ப் படித்தலுள்ளவரானப் படியினாலே தாமதமில்லாமல் தேவன் அவருக்கு கட்டளையிட்டப்படியே செய்தார். தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலிப்பீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிப்பீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக்கிடத்தினான், அப்பொழுது அவர், பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே அவனுக்கு ஒன்றும் செய்யாதே. உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தப் படியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு, நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புகொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தப்படியால், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப் படிந்தப்படியினால் உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என் பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ஆதியாகமம் : 22 : 9, 12, 15 - 18.
சேஷ்ட புத்திர பாகத்தின் முக்கியம் அறியா ஏசா :
இதில் ஒரு முக்கிய மான விசேஷம் என்ன வென்றால் ஆபிரகாம் கர்த்தர் தனக்கு கற்ப்பித்த காரியத்தை நிறைவேற்றுவதோடு நின்றுவிடாமல் அதை அவர் தன் பின் வரும் சந்ததிக்கும் சொல்லி கடைபிடிக்க செய்வது தான் ஆபிரகாமின் ஒரு சிறப்பான குணமாகும். அவரின் இந்த குணத்தை தேவனே சாட்சியாக கூறுவதை நாம் பார்க்கலாம். கர்த்தர் அபிரகாமிக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின் வரும் தன் வீட்டாருக்கும், நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்துக்கிறேன் என்றார். ஆதியாகமம் : 18 : 19. அதன்படி ஆபிரகாம் ஆண்டவர் முக்கியப்படுத்திய சேஷ்டப்புத்திர பொறுப்பை ஈசாக்கின் பிள்ளைகளான ஏசாவும் யாக்கோபும் அறிந்திருந்தும் எசாவோ அதை அசட்டைப் பண்ணினான். யாக்கோபு அதை எசாவிடமிருந்து பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினான் என்று வேதம் கூறுகிறது. ஒரு நாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தப்போது, யாக்கோபு கூழ் சமைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி, அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக்கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான். இதனால் அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று. அப்பொழுது யாக்கோபு உன் சேஷ்டப்புத்திர பாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான். அதற்கு ஏசா, இதோ நான் சாகப்போகிறேனே, இந்த சேஷ்டப்புத்திர பாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். அப்பொழுது யாக்கோபு இன்று எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான். அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திர பாகத்தை அவனுக்கு விற்றுப் போட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங் கூழையும் கொடுத்தான். அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்டப்புத்திர பாகத்தை அலட்சியம் பண்ணினான். ஆதியாகமம் : 25 : 29 - 34.
யோசேப்புக்கு சேஷ்டப் புத்திர அந்தஸ்து :
ரூபனே, நீ என் சேஷ்ட புத்திரன். நீ என் சத்துவமும், என் முதற் பெலனுமானவன். நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமானவன். தண்ணீரைப் போல தளும்பினவனே, நீ மேன்மையடைய மாட்டாய். உன் தகப்பனுடைய மஞ்சத்தின் மேல் ஏறினாய். நீ அதை தீட்டுப் படுத்தினாய். என் படுக்கையின் மேல் ஏறினானே. ஆதியாகமம் : 49 ; 3 - 4. ஆகையால் அந்த உரிமை யோசேப்புக்கு கொடுக்கப்பட்டது. இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். ஆதியாகமம் : 37 ; 3. நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வரும்முன்னே உனக்கு எகிப்து தேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர். ரூபன், சிமியோன் என்பவர்களைப் போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். இவர்களுக்குப் பின், நீ பெரும் பிள்ளைகள் உன்னுடையவர்கள். அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்திரத்தில் பங்குப்பெருவார்கள். உன் சகோதரருக்குக் கொடுத்ததைப் பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னான். ஆதியாகமம் : 48 : 5 - 6, 22. சேஷ்டப் புத்திரனுக்கு அவன் தகப்பனுடைய ஆஸ்தியில் இரண்டு பங்கு என்பது தேவனுடைய கட்டளை. வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டப் புத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டுப் பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும். அவன் தன் தகப்பனுடைய முதற் பலன், சேஷ்ட புத்திர சுதந்திரம் அவனுக்கே உரியது. உபாகமம் : 21 : 17.
இஸ்ரவேலரும் லேவியரும் முதற்பேறானவர்களாக தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் :
அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்ட புத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார். யாத்திராகமம் : 4 : 22 - 23. இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன். அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார். எண்ணாகமம் : 3 : 12. இந்த வசனங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி யாதெனில் கர்த்தர் உலகமனைத்திலுமுள்ள முதற் பேறானவர்கள் யாவருக்கும் பதிலாக இஸ்ரவேலர்களை சேஷ்ட புத்திரபாகத்திற்கு உரியவர்களாக தெரிந்துக் கொண்டார் என்பது, அதே நேரத்தில் இஸ்ரவேல் புத்திரரில் முதற்பேறானவர்கள் யாவருக்கும் பதிலாக கர்த்தர் லேவியரைத் தெரிந்துக்கொண்டார் என்பது விளங்குகிறது. இதற்காகவே நாம் இஸ்ரவேலருடைய சமாதானத்திற்காகவும் வேண்டிகொள்ள வேண்டியது நமது கடமையாகிறது காரணம் அவர்கள் நம் மூத்த சகோதரருக்குரிய அந்தஸ்துக்கு உரியவர்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் முதற்பேறானவரே :
முதற் பேறான எந்த ஆண் பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதெனப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், லூக்கா : 2 : 23. இத்தனை சான்றுகளும் நமக்கு வெளிரங்கமாயிருக்க நாமோ தேவனுடைய ஒரு முக்கியமான நீதியின் அவசியத்தை உணராமல் மனிதர்களாகிய நம்முடைய வாழ்வின் முக்கியத்துவம் உணராமல் உபத்திரவத்தில் வாழ்ந்து வருகிறோம். பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், எபிரெயர் : 12 : 23. வசனம் நமக்கு உணர்த்தும் உண்மை யாதெனில் பரலோகத்தில் முதற்பேறானவர்களுக்கென்று சர்வ சங்கம் இயங்குவதை உறுதிப்படுத்துகிறது.
இந்த சங்கத்தில் நம்முடைய முதற் பேறான பிள்ளைகளின் பெர்யர்கள் இருப்பது எத்தனை அவசியம் என்று உணருவோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பரக, ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.