Homosexuality is sin!
ஓரினசேர்க்கை அருவருப்பு! சுவி. பாபு T தாமஸ்
தேவனை அறியும் அறிவைப் பற்றிக் கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தனைக்கு ஒப்புக்கொடுத்தார். ரோமர் : 1 : 28
நம் உலகம் அழிவின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பூமியில் வாழும் மக்கள் அக்கிரமச் சிந்தை கொண்டவர்களாய் மாறிவிட்டார்கள். கொடுமையான காரியங்களை சர்வச் சாதாரனமாக தன்னோடு வாழும் சக மனிதனுக்கு விரோதமாக வெளிப்படுவதை நாம் மிக எளிதாக எங்கும் காணமுடியும். தெய்வ பயம் என்பது சிறிதளவும் இல்லாததே இதற்கு ஒரு பெரியக் காரணமாகச் சொல்லலாம். அநியாயங்களும், அநீதிகளும் தலைவிரித்தாடும் காலம் இக்காலம் திகழ்கிறது. பாவம் பெருகிவிட்டதையும், அது சமூகப் பரவலாக மாறி விட்டதையும் கண் கூடாக காணமுடியும். நாம் கொடுமைகளின் உச்சத்தை நெருங்கி விட்டோம் என்பதை சமீபக்காலமாக நாம் காணும் மற்றும் கேட்க்கும் சம்பவங்கள் கட்டியம் கூறுகிறது. சுபாவ அன்பு என்பது அதல பாதாளத்தில் போய் விழுந்து விட்டதோ என்கிற ஐயம் அடிமனதை வருடத்தான் செய்கிறது. அய்யகோ, இத்துணை அதி பயங்கரமான உலகத்திலா வாழ்கிறோம் என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு நிலைமைகள் மாறத்துவங்கி விட்டது. நாளுக்கு நாள் புதிய புதிய கோணத்திலும் புதியப் புதிய சம்பவங்களும், கூக் குரல்களும் இரத்தத்தை உறையச் செய்த வண்ணமிருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில் கடைசி காலத்தைக் குறித்தக் குறிப்புக்களை கூறுகையில், அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம் என்று கூறுகிறதை மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் காண முடியும், மத்தேயு : 24 : 12. அப்படியானால் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முதல் காரியம் நாம் அனைவரும் கடைசி காலத்தில் வாழ்கிறோம் என்பது மாத்திரமல்ல அக்காலத்தில் அக்கிரமம் பெருகும் என்பதையும் உணர்வது அவசியமாகிறது. அதே நேரத்தில் நாம் அதிகம் உணர்ந்து தெளிவடைய வேண்டியது யாதெனில் அக்கிரமத்திற்கும், அன்பிற்க்குமான நேரடி தொடர்பின் சூட்சுமம் என்பது புலப்படுகிறது. அக்கிரமம் பெருகும்போது, அன்பு தனிந்துப் போகிறதாக அன்பே வடிவான ஆண்டவர் நம்மை எச்சரிக்கிறார். காரியத்தின் கடைத் தொகையைக் கேட்ப்போமாக, தேவனுக்கு பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள். எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே, பிரசங்கி : 12 : 13. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் இருக்கும் ஒரு உன்னதமான கடமை என்னவெனில், அது மனிதர்களாகிய நாம் தேவனுக்குப் பயந்து அவர் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பது மட்டுமே. அப்படி நாம் அனைவரும் தேவனுடைய கட்டளைகளுக்கும், கற்பனைகளுக்கும், பிரமாணங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்கும்போது தெய்வ பயம் நம்மில் பெருகி ஸ்திரத் தன்மையை நமக்குள் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சுபாவ அன்பு நமக்குள் பெருகுகிறது. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் தேவ அன்பினால் இழைக்கப்பட்டவைகளாக இருக்கிறப்படியால், அவைகள் நம்மை தேவ அன்புக்கு நேராக நடத்துகிறது. தேவ அன்பின் வளர்ப்பு நம்மையும் நம் இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததேயானப்படியாலே அக்கிரம நினைவுகளிலிருந்து முற்றிலும் விடுப்பட்ட நிலைக்கு நேராக நம்மை நடத்துகிறதாயிருக்கிறது. இதைத்தான் மேற்சொன்ன வசனங்கள் நமக்கு அறிவுறுத்துகிறது, என்றாலும் நாமில் பெரும்பாலானோர் அநேக நேரங்களில் வசனங்களை தியானிப்பதிலும், தேவனை முதன்மைப்படுத்துவதிலும் பின்தங்கி விடுகிறோம். ஆனால் வேதமோ நமக்குச் சொல்லும் முக்கிய காரியம், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான், சங்கீதம் : 1 : 2. என்பதாகும். எனவே இரவும் பகலும் என்பது நம் வாழ்நாள் முழுவதும் எல்லா நேரங்களிலும் கர்த்தருடைய வேதத்தில் தியானமாய் இருப்பதையே நமக்கு வலியுறுத்துவதை பார்க்கமுடியும். அப்படியானால் அவ்வாறு தியானிப்பதின் மூலமாக அவருடைய எண்ணத்தை, விருப்பத்தை, திட்டத்தை அப்படியே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நம்மால் பிரதிபலிக்க முடியும் என்பதே உண்மை. அன்பு பெருகப் பெருக அக்கிரமத்தின் நினைவுகளோ காணப்படுவதில்லை காரணம் தேவ அன்பும் அது தரும் நம்பிக்கையுமே அக்கிரமத்தின் சுவடுகள் அறியாத வளமான வாழ்க்கைக்கு நேராக நடத்துகிறது.
இச் சூழல் தான் நம்மை பாக்கியவான்களாகவும், பாக்கியவதிகளாகவும் மாற்ற வல்லதாயிருக்கிறது என்கிற உண்மையை ஏனோ நாம் உணராமலிருக்கிறோம். இதன் காரணமாக நாம் யாவரும் அநேக இன்னல்களை, இடர்ப்பாடுகளை, போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலைகள் நம்மைச்சுற்றி சூழ்ந்திருப்பதை எப்போதும் காணமுடிகிறது. இதில் தேவனை அறியாதவர்களுடைய நிலை இன்னும் மோசம், அதிலும் சுயக்கட்டுப்பாடுகள் அற்ற வாழ்க்கை முறையிலிருப்பவர்களின் நிலையோ படு மோசம். சக மனிதனுக்கான பாதுகாப்பற்ற சூழல், சுயநலம் சார்ந்த செயல் பாடுகள், மனிதனை மனிதன் எய்த்து பிழைக்கும் கொடிய குணம் போன்றவை எல்லைமீறிய நிலைகள் எல்லாம் இன்று சகஜம். இங்கே நுட்பமாக ஒன்றை கவனிக்கவேண்டும், அதாவது இதே நிலை பண்டைய காலத்திலிருந்தது, அதிலும் குறிப்பாக பெரும்பாலும் எதிரிக்கு விரோதமாக பாதுகாப்பின் காரணங்களுக்காகவே என்ற நிலை இருந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ், சொந்த மற்றும் சக மனிதர்கள் மீதான நம்பகத்தன்மையே இன்று கேள்விகுறியாகியிருக்கிறது. அதிலும் சிறப்பாக கல்வியறிவு பெற்ற வளர்ந்த சமூகத்தில் சொந்த ஜனத்துக்கும் சக மனிதனுக்குமான அடக்குமுறைகள் எப்படி சாத்தியம் என்பது வெட்கக்கேடான காரியமாகும். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும் ? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு : 5 : 13 - 16. ஆனால் அப்படிப்பட்ட சூழல் இப்போது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் வெளிபடுத்தின விசேஷம் இரண்டாம் அதிகாரம் நான்காம் வசனத்தில், ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு எனும் வாசகத்திற்கு இணங்க நிலைமை வெகுவாக மாறிவிட்டது என்பதே நிஜம். இதனால் ஏற்பட்டுள்ள தாக்கமே இந்நாளில் காணப்படும் அவலங்களுக்கு காரணம் என்றால் அது மிகையல்ல. சமுதாய மாறுமலர்ச்சிக்குப் பதிலாக சமுதாயம் விழ்ச்சியை நோக்கிய பயணத்தில் அதி தீவிரமாக இருப்பதை தெளிவாக காணமுடியும். நீதி, நேர்மையாய் நடப்போரையும் நன்மை செய்வோரையும் மிகவும் அரிதாய் காணும் நிலையே எங்கும் உருவாகிவருகிறது. பாசம் நேசம் என்பவைகள் மருந்துக்கும் இல்லை என்பது துரதஷ்டமானது. அந்த அளவிற்கு சமுதாயத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும், சாமான்யன் முதல் பிரபலங்கள் வரை, படிப்பறிவு சிறிதேனும் இல்லாதவன் முதல் மெத்த படித்தவன் வரை, ஏழை முதல் பெரும் பணக்காரன் வரை, மிகச் சாதாரண குடிமகன் முதல் ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் வரை அனைவரும் நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கும் சூழலில் வாழ்கிறோம் என்பதே இன்றைய அவல நிலை. காரியம் இப்படியிருக்க தனக்குத்தானே குழி வெட்டிக்கொள்ளும் கொடுமை தான் இன்றைக்கு சமுதாயத்தில் பரவலாக பெருகிவரும் ஓரினசேர்க்கை எனும் பாவம். சுமார் 28 countries recognize same-sex marriage; they are: Argentina, Australia, Austria, Belgium, Brazil, Canada, Colombia, Denmark, Ecuador, Finland, France, Germany, Greenland, Iceland, Ireland, Luxembourg, Malta, Mexico, the Netherlands, New Zealand, Norway, Portugal, South Africa, Spain, Sweden, Taiwan, the United Kingdom, the United States and Uruguay மற்றும் இவைகளோடு இன்னும் பிற நாடுகள் ஓரினசேர்க்கை சேர்க்கையாளர்களின் நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன. இன்னும் பிற நாடுகள் விரைவில் சட்ட அங்கீகாரத்தோடு நாட்டை இப்படிப்பட்ட பழக்கமுடையவர்களுக்கு திறந்து விடக் காத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் சத்திய வேதகமோ ஓரினசேர்க்கை சேர்க்கை அருவருப்பானது என்றுக் கூறி, அப்படிப்பட்ட பழக்கத்தை பாவக்கணக்கில் சேர்க்கிறது. அதே நேரத்தில் சோதோம் கொமோரா எனும் செழுமையானப் பட்டணங்களின் அழிவிற்கு மூலக் காரணமே அப் பட்டணங்களில் பெருகி இருந்த ஓரினசேர்க்கை சேர்க்கை எனும் பாவமேயாகும்.
ஓரினசேர்க்கை எனும் பாவம் :
பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறது போல ஆணோடே சம்யோகம் பண்ண வேண்டாம், அது அருவருப்பானது. யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதினாலே உன்னைத் தீட்டுப் படுத்த வேண்டாம். ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது, அது அருவருப்பான தாறுமாறு. இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப் படுத்தாதிருங்கள். நான் உங்கள் முன்னின்று துரத்தி விடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப் படுத்தியிருக்கிறார்கள். தேசமும் தீட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்ப்பேன். தேசம் தன் குடிகளைக் கக்கிப் போடும். இந்த அருவருப்புக்களை எல்லாம் உங்களுக்கு முன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று. இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப் போட்டதுப் போல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும் போது அது உங்களையும் கக்கிப் போடாதப்படிக்கு, நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம். இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றையும் யாராவது செய்தால், அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதப்படிக்கு அறுப்புண்டு போவார்கள். ஆகையால் உங்களுக்கு முன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றையும் நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப் படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். லேவியராகமம் : 18 : 22 - 30. இந்த வசனங்களை கூர்ந்து கவனித்தாலே ஓரினசேர்க்கை எனும் அருவருப்பைத் தேவன் எவ்வளவு தீவிரமாக அருவருக்கிறார் என்பது நன்கு புலப்படும். அதே வேளையில் அப் பாவத்தினால் விளையும் பின் விளைவுகளின் தன்மைகள் யாவை என்பதும் நமக்கு நன்கு புரியும். இந்திய வரலாற்றின் தொன்மையை பறைசாற்றுவதாய் இருப்பது சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் கீழடி நாகரிகம் ஆகும். இவைகள் அன்றைய கால இந்திய வரலாற்றின் நவ நாகரிகத்தின் சான்றுகளாய் விளங்குகிறது. ஆனால் அவ்வாறு வளர்ந்தோங்கிய நாகரிக நகரங்கள் அழிந்தற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும் நிச்சயம் வேதாகமம் சொல்லும் காரணங்கள் பொருந்தும் என்பது திண்ணம். உண்மையில் இப்படிப்பட்ட அருவருப்பான பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் வளர்ந்த நவ நாகரிக நகரங்களில் அதிகம் பெருகுவதை பல்வேறு சான்றுகள் நமக்கு பறைசாற்றுகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் நமது இந்திய தேசத்தில் ஓரினசேர்க்கையின் தாக்கமானது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக மெல்ல தலை தூக்கி இருந்தாலும் சுமார் 10 - 12 ஆண்டுகளாகத்தான் பெருமளவு பேசப்படும் சம்பவமாக வெளியில் பட்டவர்த்தனமாக தலையெடுக்க ஆரம்பித்தது என்று சொல்லமுடியும். வசதி வாய்ப்புக்கள் பெருகப்பெருக நவ நாகரிக மோகத்தின் வளர்ச்சி மக்களின் நடவடிக்கைகளில் காணப்படும் மாற்றங்கள் புதிய புதிய எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. எனவே எண்ணங்களில் ஏற்படும் மாற்றமே செயல்வடிவம் பெறுகிறது. ஆகவே காலமாற்றங்கள் மக்களிடையே இப்படிப்பட்ட அருவருப்பான காரியங்களில் நட்டத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாத காரணிகளாக மாறும் சூழலை காணலாம்.
பெரும்பாலும் சிறு பிள்ளைகள் மீதான மோக தாபங்கள் சமீபக் காலமாக பெருகி வருவதை அதிகமாக செய்தி ஊடகங்கள் வாயிலாக கேட்க ஆரம்பித்திருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளாக சிறு பிள்ளைகள் மீதான அடக்குமுறைகள் நாட்டில் அதிக அளவில் பெருகிவருகிறது வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறதாயிருக்கிறது. அதிலும் குறிப்பாக சிறு பிள்ளைகள் மீதான வன்புணர்வுகள், பாலியல் ரீதியிலான அடக்குமுறைகள் போன்ற கொடூரங்கள் 95% அப்பிள்ளைகளுக்கு மிக நெருங்கிய உறவுகள் மூலமாகவும், அறிமுகமானவர்கள் மூலமாகவுமே நிகழ்த்தப் படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சொந்த தந்தை, தாத்தா, மாமா போன்ற நெருங்கின உறவுகளின் மூலமாக பெருமளவு பாதிக்கப்பட்ட பிள்ளைகள் ஏராளம். இங்கே ஓரு முக்கிய காரியத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது இப்படியாக தங்கள் சிறு பிராயத்தில் கொடூரமாக பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுவதால் அவர்கள் உளவியல் ரீதியிலும் பாதிக்கப்படுவதால் இயல்பாக ஆண் பாலினத்தவர் மீதான பய உணர்வு, நாளடைவில் அதுவே உள்ளத்தில் மாறாத ரணமாகி ஆண்பாலின் மீது வெறுப்பும் அதே நேரத்தில் தன் பாலினத்தின் மீதான ஈர்ப்பையும் வெளிப்படுத்துகிறதாக மாறிவிடுகிறது. எனவே இவ்வகையான காரணங்கள் ஓரினசேர்க்கையாளர்கள் அதிகமாக பெருகுவதற்கான காரணிகளாக பார்க்கபடுகிறது. எது எப்படியாயினும் அருவருப்பான முறையற்ற உறவு முறைகள் தேவ கோபத்தையே அதிகரிக்கச்செய்யும் எனபதை மறுப்பதற்கில்லை. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லா வித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப் படுத்தப்ப்ட்டிடிருக்கிறது. தேவனைக் குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது. தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். ரோமர் : 1 : 18 - 27, என்கிற தேவ நீதியை அசட்டைப் பண்ணப் படாதப்படிக்கு கவனத்தில்கொண்டு செயல் படுவது மிக மிக அவசியம். ஆமென்.
Evg. Babu T Thomas, Our Shepherd's Voice Foundation, Tamil Nadu, South India