top of page

Success is not a chance!

வெற்றி, வாய்ப்பல்ல - விருப்பம்! சுவி. பாபு T தாமஸ்

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு. அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் : 37 : 5.


கர்த்தருக்கு காத்திருந்தால் எல்லாம் நடந்து விடுமா? வயிறு நிரம்பிடுமா? பிள்ளைகள் வளர்ந்திடுவார்களா? வேலை கிடைச்சிடுமா ? திருமணம் நடந்திடுமா? இது போன்ற ஏராளமான கேள்விகள் அநேகருக்கு அநேக நேரங்களில் குறிப்பாக கடினமான வேளைகளில் நம் மனதில் தோன்றுவது இயல்பு. ஏன் இது தான் சமயம் என்று பலர் இப்படிப் பட்ட அநேகவகையான கேள்விக் கணைகளை தொடுத்து துளைத்தேடுப்பதும் உண்டு. தேவனால் ஆகாதக் காரியம் ஒன்றுமில்லை. தேவனேன்பவர் சகல சிருஷ்டிக்கும் அதிகாரி, சகலமும் அவராலே அல்லாமல் உருவாகவில்லை. இது தான் உண்மை. இந்த உண்மையை அறியாதவர்களே பல புரட்டு வார்த்தைகளை கூறி பெலவீனமான மக்களை குழப்புவதும் உண்டு. இங்கே நாம் குறிப்பிடும் பெலவீனமானவர்கள் என்பவர்கள் யாரென்றால் தேவ வல்லமையை முழுவதுமாக உணராதவர்களும், அதே வேளையில் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் என்று சாய்ந்தால் சாய்கிற பக்கம் என்று ஒரு சாரார் இருப்பார்களே, அவர்களைப் போன்றோரையே இங்கு பெலவீனமானவர்கள் என்று குறிப்பிடுகிறோம். தேவனை அறியும் அறிவு என்பது அனைவருக்கும் உரிய ஒன்றே. இதை ஒரு சிலரே சரியாகப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் பலரோ அப்படி அல்ல. எல்லோரும் ஒன்று போல் இருப்பதில்லை. பலரும் பலவகைளில் வேறுப்படுகிறார்கள் எனபதும் உண்மை தான். பலர் சிந்தனைகளால் வேறுபடுகிறார்கள், செயல் முறைகளில் வேறுபடுகிறார்கள், உடல் வாகு என்று பல்வேறு வகைகளில் ஒருவருக்கொருவர் வேறுப்பட்டு இருந்தாலும் படைத்தவர் ஒருவரே. அவர் படைப்பில் பல வகைகள் இருந்தாலும் அனைவருக்கும் ஒருவரே தேவன். மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானத்தைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப் பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவன் அந்தர வெளியில் கறளையாய்ப் போன செடியைப் போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான். கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிக்கொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான். எரேமியா : 17 : 5 - 8. தேவனை சார்ந்து வாழும் வாழ்க்கை என்பது முடிந்துப் போகும் வாழ்க்கையல்ல, அது தொடர்ந்து பயணிக்கும் வாழ்க்கை என்பதை நாம் ஆழமாக புரிந்துக்கொள்ளவேண்டும். மனிதர்களாகிய நம் ஒவ்வொருவர் மீதும் தேவனுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அவ்வாறே அந்நோக்கதினை நிறைவேற்றவே நாம் பூமியில் பிறந்திருக்கிறோம். உண்மையில் நாம் திசைமாறிப் பயணிக்கையில் நம் நோக்கங்களை அறிவது அரிதானக் காரியமே. தேவ திட்டத்தை உணர்ந்து, அதன் அடிப்படையில் நம்மை வளர்த்துக்கொண்டு எழும்பவேண்டும், எழுந்து செயல்படவேண்டும். அப்போது தான் நம் பிறவிப் பயனை அடைய முடியும். இதற்கு கடின உழைப்பு மிக மிக முக்கியம், கடின உழைப்பில்லாமல் எதுவும் சாத்தியமில்லை. வாழ்க்கை என்பது ஒரு ஓட்டம் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அது ஒரு நோக்கம் என்று அறிந்து யார் ஒருவன் அறிந்து தெளிந்து ஓடுகிறானோ, அவனே இலக்கை அடைகிறான் வெற்றியும் பெறுகிறான்.


யார் வெற்றியாளர்கள் :


பொருளாதார ரீதியில் வெற்றிப்பெறுகிறவர்கள் எல்லாம் வெற்றியாளர்களும் இல்லை, அதே பொருளாதார ரீதியில் தோல்வி அடைகிறவர்கள் யாவரும் தோல்வியாளர்களுமில்லை. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும், அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். நீதிமொழிகள் : 10 : 22. ஐசுவரியத்தைக் குறித்த காரியங்கள் சத்திய வேதாகமத்தில் ஏராளமாக பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது. முதலாவது ஐசுவரியவானாக வேண்டும் என்று விரும்பாதீர் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஐசுவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே, சுய புத்தியைச் சாராதே. நீதிமொழிகள் : 23 ; 4. பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று எச்சரித்திருந்தும் நம்முடைய வாழ்க்கையை இந்தப் பொல்லாதக் காரியத்தை மையப்படுத்தியே அமைத்துக்கொள்ளுகிறோம் அல்லது ஐசுவரியத்தை வைத்தே ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது வேதனை. ஐசுவரியமும், கனமும் கர்த்தரால் வருகிறது எனபதை மறந்து விட்டோம். ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது. தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர். உம்முடைய கரத்திலே சத்துவமும், வல்லமையும் உண்டு. எவரையும் மேன்மைப்படுத்தவும், பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். II நாளாகமம் : 29 : 12. இதற்கு ஒரு அழகிய உதாரணம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூ றுகிறார், ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். மாற்கு : 10 : 25. இந்த சம்பவத்தை நாம் உற்று கவனிப்பது நல்லது . பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது! மாற்கு : 10 : 17 - 24. இங்கே நாம் கவனிக்கவேண்டிய முக்கிய காரியம் என்னவென்றால், நித்திய ஜீவனை சுதந்தரிக்கும் நோக்கத்தோடு வாழ்ந்துவரும் ஒருவன், அதற்கென தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து தேவனுடைய கட்டளைகளையும் பிரமாணங்களையும் சிறுப்பிராயம் முதலே கடைப்பிடித்துவரும் ஒருவனைக் குறித்த நிர்ணயம் இப்படி இருக்குமானால் நாம் இந்த ஐசுவரியத்தைக் குறித்த காரியங்களில் எத்தனை அதிகமான தெளிவுடன் இருக்கவேண்டும் என்பதை அறிந்திருப்பது நல்லது.


ஆகவே ஒருவரின் ஐசுவரியம் வெற்றிக்கான எடைக்கல்லாக இருக்கமுடியாது, மாறாக ஒருவரின் நோக்கமறிந்த வாழ்க்கை முறையே வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கிறது என்பதே அடிப்படையாகக் இருக்க வேண்டும். ஆனால் உலகம் அதை ஏற்க மறுக்கிறது, காரணம் மனம் ஐசுவரியத்தின் மேல் குறியாயிருக்கிறது, மாயையில் நம்பிக்கை வைக்கிறது. ஐசுவரியம் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, அதே நேரத்தில் பணம் இல்லாமல் உலகத்தில் வாழமுடியாது என்பதும் உண்மையே. அப்படியானால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது செல்வத்தின் மேல் மனிதன் வைக்கும் அதீத நம்பிக்கையும், ஆசையையுமே தவறு என்பதை நாம் உணரவேண்டும். பணம் முக்கியமே ஆனால் பணமே முக்கியம் எனும் கூற்றிலிருந்து நாம் விலகி வாழப்பழக வேண்டும் என்பதே முக்கியம். தேவன் நம்மை பணம் சம்பாதிக்கவும், பொருள் ஈட்டவும், ஐசுவரியவானாகவும், பதவிகள் வாங்கவும் அதன் மூலமாக அந்தஸ்து, கெளரவம் அடையவும் நம்மை படைக்கவில்லை. மாறாக அவரை சார்ந்து வாழவும், அவர் நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் வாழவுமே நம்மை தேவன் அழைத்திருக்கிறார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அதை பண்படுத்தவும், காக்கவும் வைத்தார். ஆதியாகமம் : 2 : 15. ஆனால் மனிதன் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆளுகைக்காக ஆளாய் பறக்கிறான். இதை சுருங்கச் சொல்வதானால் கிடைத்ததை பறித்தவனிடம் விட்டுவிட்டு பறித்தவனைக்கொண்டே பறிகொடுத்ததை பிடிக்கத் துடிக்கிறான் மனிதன். செல்வத்தை பெருக்குவது நல்லது தான், ஆனால் அதையே நோக்கமாக செயல்படுவது பாதையை மாற்றிவிடும் என்பதே சத்திய வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. அது தான் உண்மையும் கூட என்பது பட்டவர்த்தனமாக நம்மைச்சுற்றி நடக்கும் காரியங்கள் உணர்த்துவதை யாரும் மறுக்க முடியாது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். பணம் என்றால் பொணம் கூட எழுந்து உட்காரும் என்றெல்லாம் வேடிக்கையாக சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்த அளவிற்கு புரட்டும், உருட்டும், திருட்டும் என தார்மீக வாழ்க்கையை தடம் மாற்றி தாறுமாறாய் உருட்டி விளையாடுவதை கண் கூடாக பார்க்கத்தானே செய்கிறோம். இதற்கு சத்தியத்தை அறிந்தவர்களும், சத்தியத்தை போதிக்கிறவர்களும் விதி விலக்கில்லை தான், ஆசை யாரை விட்டது பாவம். மனிதன் நினைக்கிறான் பொய்யும் புரட்டுமே வாழ்க்கை என்று, அது தான் இல்லை என்கிறது வேதம். தேவன் மனிதனை வெற்றியாளனாகவும், ஐசுவரியவானகவும், அதிபதியாகவுமே பார்க்க விரும்புகிறார். தேவன் மனிதனை அப்படியிருக்கவே படைத்தார், அதிகாரத்தையும் தந்தார் என்பது தான் உண்மை. மனிதன் தான் தேவ திட்டத்தையும், விருப்பத்தையும் உணராமல் தன் அதிகாரத்தை வசதி வாய்ப்புக்களை இழந்துப் போனான். தேவன் மனிதனுக்கு ஆளுகையை கொடுத்திருந்தார், சகலமும் மனிதனுக்கு கீழ்பட்டிருக்கக் கட்டளையிட்டிருந்தார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்ட்டித்தார். அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி, நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்ககையும் ஆண்டுக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லி, தேவன் அவர்களை ஆசிர்வதித்தார். ஆதியாகமம் : 1 : 27 - 28. என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது. இதே காரியத்தை தேவன் மீண்டும் பிரளயத்திற்கு பின்னர் நோவாவிடமும் அவருடைய குமாரர்களிடமும் கூறுவதையும் காணமுடியும். பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். உங்களைப் பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும். பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும் உங்களுக்குக் கையளிக்கப்பட்டன. ஆதியாகமம் : 9 : 1 - 2.


சாபமான மனிதன் :


சகல சவ்பாக்கியத்தையும் பெற்ற இனம் தான் மனித இனம், ஆனால் தன்னுடைய கீழ்ப் படியாமையின் காரணமாகவே தம் மேன்மையை இழந்தோம் என்பதை உணராமல் வாழ்வது வேதனையிலும் வேதனை. எதற்காக தேவ கோபத்திற்கு மனித இனம் ஆளாக்கப்பட்டதோ அதே தவறை மனிதன் மேலும் மேலும் செய்து தேவனை விட்டு விலகியே வாழும் அவலம் ஒரு தொடர்கதை. இஸ்ரவேலர்களை அசீரியர்களும், யூதாவை பாபிலோனியர்களும் சிறைபிடித்துக்கொண்டு போனப்பின்பு யூதாவில் மீந்திருந்த மக்களும் தேவனுக்குமான சம்பாஷணைகளை வாசித்தாலே இது விளங்கும். பாவத்தின் சம்பளம் மரணம், அழிவு என்பதை எல்லா வகையிலும் எச்சரித்தும் மனிதன் மாறவில்லை என்பதற்கு சான்று தான் வேதத்தில் காணப்படும் இஸ்ரவேலர்களின் வாழ்க்கை முறை. யூதாவையும் எருசலேமையும் பாபிலோனிய மன்னன் நேபுகாத்நேசாரின் சிறை பிடிப்பு அத்தியாயத்தின் இறுதி நாட்களுக்கு முன்பிருந்தே யூதாவையும் அதை ஆண்ட சிதேக்கியா ராஜாவையும் தேவன் எரேமியா தீர்க்கதரிசி மூலமாக அவர்கள் செய்ய வேண்டியதை கூறி எச்சரித்து வந்தார். இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப்போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும், இந்த நகரம் பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும், எரேமியா எல்லா ஜனத்தோடும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் குமாரனாகிய கெதலியாவும், செலேமியாவின் குமாரனாகிய யூகாலும், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் கேட்டார்கள். அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் க்ஷேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள். அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான். முரட்டாட்டமான ஜனமோ தேவ வார்த்தையை உணராமல் தேவ வார்த்தையைக் கொண்டு வந்த தேவ மனுஷனையே தண்டித்தார்கள், பல நாள் சிறைவாசத்தை மேற்கொள்ளவும் செய்தார்கள். இந்நிலையில் பாபிலோனிய சிறையிருப்பில் மீந்த யூத ஜனங்ளோ எரேமியாவை சந்தித்து தேவ சித்தத்தை அறிய விரும்புகிறார்கள். அப்பொழுது எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், ஓசாயாவின் குமாரனாகிய யெசனியாவும், சிறியோர் முதல் பெரியோர்மட்டுமான சகலஜனங்களும் சேர்ந்துவந்து, தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் நாங்கள் நடக்கவேண்டிய வழியையும், செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரியப்பண்ணும்படிக்கு, நீர் எங்கள் விண்ணப்பத்துக்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்தச் சகல ஜனங்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும். உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள்.


அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணுவேன்; கர்த்தர் உங்களுக்கு மறுஉத்தரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லா வார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருக்கக்கடவர். அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று. அப்பொழுது அவன், கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும், சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து, அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பஞ்செய்யும்படிக்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன். நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து, அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல், நாங்கள் இந்த தேசத்திலே இருக்கிறதில்லையென்றும், நாங்கள் யுத்தத்தைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாய் இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தரித்திருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில், யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால், நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்துவரும், அங்கே சாவீர்கள். எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக்காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளிலே உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள். உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள். நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்துக்கும் செவிகொடாமற்போனீர்கள். இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற ஸ்தலத்தில் தானே பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.


எரேமியா சகல ஜனங்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய எல்லா வார்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு, ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல, எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை. கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள். அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள். யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரத்திகளையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள். தக்பானேசிலே கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: நீ உன் கையிலே பெரிய கற்களை எடுத்துக்கொண்டு, யூதா ஜனங்களுக்கு முன்பாக அவைகளைத் தக்பானேசில் இருக்கிற பார்வோனுடைய அரமனையின் ஒலிமுகவாசலில் இருக்கிற சூளையின் களிமண்ணிலே புதைத்து வைத்து, அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜகூடாரத்தை அவைகளின்மேல் விரிப்பான். அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான். எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப்போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான். அவன் எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். எகிப்துதேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் சீமையிலும் வாசமான எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்: இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின்மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள். இதோ, அவர்களும் நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேவர்களுக்கு தூபங்காட்டவும், ஆராதனைசெய்யவும் போய், எனக்குக் கோபமூட்டும்படிக்குச் செய்த அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம், அவைகள் இந்நாளில் பாழாய்க்கிடக்கிறது, அவைகளில் குடியில்லை. நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் அந்நியதேவர்களுக்குத் தூபங்காட்டாதபடிக்கு, என் சொல்லைக் கேளாமலும், பொல்லாப்பை விட்டுத் திரும்புவதற்குச் செவியைச் சாய்க்காமலும் போனார்கள்.


ஆகையால், என் உக்கிரமும் என் கோபமும் மூண்டு, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்தது; அவைகள் இந்நாளில் இருக்கிறபடி வனாந்தரமும் பாழுமாய்ப்போயிற்று. இப்போதும் இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் யூதாவில் ஒருவரையும் உங்களுக்கு மீதியாக வைக்காமல், உங்களில் புருஷனையும் ஸ்திரீயையும் பிள்ளையையும் பால்குடிக்கிற குழந்தையையும் வேரற்றுப்போகப்பண்ணும்படிக்கு, உங்கள் கைகளின் கிரியைகளாலே எனக்குக் கோபமூட்டுகிற பெரிய பொல்லாப்பை உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாகச் செய்து, உங்களை வேரற்றுப்போகப்பண்ணுவதற்காகவும், நீங்கள் பூமியின் சகல ஜாதிகளுக்குள்ளும் சாபமும் நிந்தையுமாயிருப்பதற்காகவும், நீங்கள் தங்கியிருக்கவந்த எகிப்துதேசத்திலே அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டுவானேன்? யூதாதேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் உங்கள் பிதாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், அவர்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும், நீங்கள் செய்த பொல்லாப்புகளையும், உங்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும் மறந்துபோனீர்களோ? அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை. ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உங்களுக்குத் தீங்குண்டாகவும், யூதாவனைத்தையும் சங்கரிக்கத்தக்கதாகவும், என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்பி, எகிப்துதேசத்திலே தங்கும்படிக்கு வரத் தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்திலே நிர்மூலமாவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்துக்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் செத்து, சாபமும் பாழும் பழிப்பும் நிந்தையுமாவார்கள். நான் எருசலேமை தண்டித்தபடி எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களையும் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன். எகிப்துதேசத்திலே தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்திலே குடியேறுவதற்கு அங்கே திரும்பிப்போகவும்வேண்டுமென்று இங்கே வந்த மீதியான யூதரிலே மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான். அப்பொழுது தங்கள் ஸ்திரீகள் அந்நியதேவர்களுக்குத் தூபங்காட்டினதாக அறிந்திருந்த எல்லாப் புருஷரும், பெரிய கூட்டமாய் நின்றிருந்த எல்லா ஸ்திரீகளும், எகிப்துதேசத்தில் பத்ரோசிலே குடியிருந்த சகல ஜனங்களும் எரேமியாவுக்குப் பிரதியுத்தரமாக: நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல், எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம். நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்துபோனோம். மேலும் நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் எங்கள் புருஷரின் அனுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை வார்த்து, அவளை நமஸ்கரித்தோமோ? என்றார்கள். அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த சகல ஜனங்களாகிய ஸ்திரீ புருஷர்களையும் மற்ற யாவரையும் நோக்கி: யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் பிதாக்களும் உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் ஜனங்களும் காட்டின தூபங்களை அல்லவோ கர்த்தர் நினைத்துத் தம்முடைய மனதிலே வைத்துக்கொண்டார். உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக்கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று. நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான். பின்னும் எரேமியா சகல ஜனங்களையும், சகல ஸ்திரீகளையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்கு தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே. ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனுஷர் எல்லாரும் ஒழிந்து தீருமளவும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சங்காரமாவார்கள். ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதாதேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள். எரேமியா : 42 - 44. இவ்விதமாக தேவனை அறியாமலும், அவர் சித்தத்தை உணராமலுமே மக்கள் சங்காரமாகிறார்கள் என்பது நடந்த நிகழ்வுகளின் மூலம் நன்கு நிருபணமாகிறது. தேவன் தம்முடைய பலத்த கரத்தினாலே எகிப்திலிருந்து சீனாய் வனாந்திர வழியாய் நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தி வந்து பாலும் தேனும் ஓடுகிறதான கானான் தேசத்தில் கொண்டு வந்து அவரவர் சுதந்திர சந்தான வீதத்தின்படி பங்கிட்டுக் கொடுக்கச் செய்தார். இந்தப் பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள். கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று. யோசுவா : 21 : 43 - 45. ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான். யோசுவா : 22 : 5. ஆனாலும் எகிப்திலே அடிமைகளாய் வாழ்ந்தவர்கள் சுய தேசத்தின் சுதந்திரவாளிகளானப் போதும் தேவனால் மோசேயின் மூலமாய் கட்டளைகளை பெற்றிருந்தும் தேவனுக்கு விரோதமாக வாழும் வழக்கத்திலிருந்து பின்வாங்காமல் தேவனை மறந்து பின்னும் அதிகமாய் பாவம் செய்தார்கள்.

விளைவு தொடர் வீழ்ச்சிக்கு ஆளாகி வந்தார்கள், இஸ்ரவேலர்களை சுற்றிலுமிருந்த ராஜ்ஜியங்களான மெசொப்பொத்தேமியார் முதல் மோவாபியர், பெலிஸ்தியர், கானானியர், மீதியானியர், அம்மோனியர் என்று பல்வேறு ராஜாக்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள். இஸ்ரவேலர்களுக்கு இது வழக்கமான காரியம், காலப்போக்கில் தேவ கட்டளைகளை மறந்து கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்கிறப்போதெல்லாம் இஸ்ரவேலர்கள் அன்னியர் கைகளில் அடிமைப்பட்டு கிடப்பார்கள். அதேப்போல அடிமை நுகத்தின் வலியின் உக்கிரம் தெரியும்வரை பூனை கரி அடுப்பினடியில் சூட்டின் கதகதப்பில் சுருண்டு படுத்து கிடப்பது போல் படுத்து கிடப்பார்கள். பூனைக்கு அடுப்பின் சூடு உறைத்தால் துள்ளி எழுந்து ஓடுவது போல் இஸ்ரவேலர்கள் தேவனை அண்டும்போது, தேவன் அவர்களில் ஒரு இரட்சகனை எழுப்புவார். அவன் வாழ்நாள் வரை இஸ்ரவேலரை நியாயம் விசாரித்து அன்னியர் கையிலிருந்து மீட்டு இரட்சித்து வருவான். அப்புறம் அவன் காலத்துக்குப் பின் மீண்டும் தேவனை மறப்பது, கட்டளைகளை மீறுவது அதனால் அடிமை வாழ்க்கை என்று இது அவர்கள் வாடிக்கை. வெற்றி என்பது வாய்ப்பல்ல விருப்பம் என்பதை இஸ்ரவேலர்கள் கடைசி வரை உணரவே இல்லை.


எகிப்திற்கு இஸ்ரவேல் தன் பரிவாரங்களோடு ராஜ மேன்மையோடு தான் போனார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்திற்கு போவதற்கு முன் ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற யோசேப்பு எகிப்திற்கு போய் பார்வோனுக்கு அடுத்த இடத்தில் இருந்து அதிகாரம் செலுத்தி வந்தான். நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி, பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான். பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். ஆதியாகமம் : 41 : 40 - 44. தேசத்தில் பஞ்சம் வந்தபோதோ, இஸ்ரவேலர்கள் எகிப்திற்குள் சாதாரணமாக வரவில்லை, மாறாக ராஜ மேன்மையோடு வந்தார்கள். பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்துக்குப் போய், உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டுவாருங்கள். உங்கள் தட்டுமுட்டுகளைக்குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான். ஆதியாகமம் : 45 : 17 - 20. எனவே ஒரு ராஜாவின் குடும்ப அந்தஸ்த்தோடு எகிப்திற்குள் நுழைந்தார்கள், வாழ்ந்தும் வந்தார்கள். யோசேப்பிற்குப் பின் எல்லாம் மாற ஆரம்பித்தது காராணம் அவர்கள் தேவனை தேட மறந்தார்கள். இப்படியாக அடிமை வீட்டிலிருந்து தேவனால் விடுவிக்கப்பட்டதையும் அவர்கள் உணரவில்லை இஸ்ரவேலர்களை அசீரியர்கள் சிறை பிடித்தப்போதும் சரி, யூதர்களை பாபிலோனியர்கள் முற்றுகையிட்டு அதின் ராஜாவாகிய யோயாக்கீன் மற்றும் அவனோடு ஒரு கூட்டத்தை சிறையாக பிடித்து கொண்டு போனப்போதும், அவ்வளவு ஏன் தேசம் முழுவதும் தீக்கரையாக்கி மதில்களை இடித்து தேசத்து பிரபுக்களை வெட்டியப்போதும் மக்கள் உணரவில்லை. பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான். கல்தேயர் ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள். நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான். எரேமியா : 39 : 6 - 9.


சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள்.











Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page