top of page

கிறிஸ்தவம் பரிசுத்தத்தின் அடையாளம் - சுவி.பாபு T தாமஸ்!

கிறிஸ்தவம் பரிசுத்தத்தின் அடையாளம் – சுவி.பாபு T தாமஸ்!


நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். சங்கீதம் : 99 : 9.


பரிசுத்தம் என்றால் என்ன?


தூய்மை, மாசு மருவற்ற நிலை, கள்ளம் கபடமில்லா தன்மை போன்ற காரியங்களை உதாரணங்களாக சொல்லலாம். இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால், அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத் தினாலே பாவ மன்னிப்பையும் பரிசுத்தமாக்கப் பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும் பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். அப்போஸ்தலர் : 26 : 18. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். I யோவான் : 1 : 5 – 7. பரிசுத்தம் என்பது தன்மை, இத்தன்மையை பெறுவது தான் மனிதனின் மேலான கடமையாகும். பரிசுத்தமாய் வாழ்வது மேன்மையிலும் மேன்மையாகும். இந்த பரிசுத்த தன்மையை மனிதன் அடையவேண்டும் என்பதற்காக தான் இயேசு கிறிஸ்து நம் பூமிக்கு நம்மை சந்திக்க வந்தார். பரிசுத்த ஜீவியம் என்பது மனுக்குலத்தின் பிரதானமான நோக்கம், வெற்றியின் ரகசியமும் அதுவே. ஆனால் மனிதன் பரிசுத்த ஜீவியம் எனும் இலக்கிலிருந்து விழுந்து போகிறான். இத்தன்மையை அடைவது என்பது எவ்வகையிலும் இயலாத காரியமல்ல, தேவனுடைய ஒத்தாசையோடு இது சாத்தியமே. இதற்காகத்தான் இயேசு கிறிஸ்து மனிதனைத் தேடி பூமியில் அவதரித்தார். ஏன் அவதரித்தார் அல்லது ஏன் மனிதனை இயேசு கிறிஸ்து மீட்கவந்தார் என்றால் மனிதனை பரிசுத்த வித்தாக மாற்றவேண்டும் என்பதே அவரது நோக்கம். யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். எபிரெயர் : 12 : 14 – 17.


திசை மாறும் மனித வாழ்க்கை :


உண்மை இப்படியிருக்க, பலர் பின்மாற்றத்தை நோக்கி திரும்பியும், இன்னும் பலர் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொருட்டு மாறுபாடான சிந்தனைகளை உருவாக்கி திசைத்திருப்பும் வேளையில் அதிகமாக ஈடுபட்டு வருவது போன்ற காரியங்களால் மனிதன் தன் நோக்கத்தை இழந்து வருகிறான். மனிதன் லௌகிக சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு சிற்றின்பத்தில் பிரியம் கொண்டு தேவனுடைய நோக்கத்திற்கு மாறாக தன் பயணத்தை திசை திருப்பி விட்டான். பரிசுத்த வேதாகமத்தில் அழகான ஒரு சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது, ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப் படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார். லூக்கா : 16 : 19 – 31. இந்த உவமை சொல்லும் செய்தி என்ன என்று சிந்திப்போமானால், இந்த சம்பவத்தில் வரும் ஐசுவரியவான் கதாபாத்திரத்தை நாம் சற்று கவனித்தால் பல உண்மைகள் விளங்கும். ஐசுவரியவன் தன் மேலான நோக்கத்தை நினைத்து அவன் பூமியில் வாழும் போது அவன் வாழவில்லை. அவனுடைய நோக்கமெல்லாம் தான் சம்பூரணமாக வாழவேண்டும் என்று நினைத்தான், அதற்கு ஏற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். அதற்காக பாடுபட்டான் சுக போகமாக வாழ்ந்தான் என்று பரிசுத்த வேதாகமம் நமக்குத் தெளிவுப் படுத்துகிறது.


மனிதர்கள் சிந்திக்கத் தவறும் காரியங்கள் :


இன்றைக்கு ஏராளமான பலத்துறை பிரபலங்கள் பிறப்பால் கிறிஸ்துவ வழியில் வளர்ந்து பின்னாளில் திசை மாறும் வாழ்க்கை பயணங்களை நாம் கண் கூடாக பார்க்க முடிகிறது. அப்படிப்பட்டவர்கள் நோக்கம் எல்லாம் தான் உயரவேண்டும், பிரபலமாக வாழ வேண்டும் என்பது தான். ஆனால் அவர்கள் தங்கள் பயணங்கள் தங்கள் வாழ்வின் மேலான நோக்கத்தை நோக்கிய பயணமாக அமைந்திருக்கிறதா என்று யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை. இந்த உணர்வை அவர்கள் பெற்று வாழும் படிக்கு அவர்கள் பெற்றோர் முயற்சி செய்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் சார்ந்த திருச்சபைகள் செய்திருக்கவேண்டும் அல்லது தங்கள் சுய விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்ப்பட்டு உண்மையை சார்ந்து அப்படி தங்கள் பயணத்தை தீர்மானைக் கிறவர்களாக இருக்கிறார்களா? எது எப்படியாயினும் தங்கள் நோக்கத்தை புறக்கணித்து சுயத்தைச் சார்ந்து தங்கள் வாழ்வை திர்மானிக்கிறார்கள் என்று தான் பொருள். எது எப்படியோ நடந்தது என்ன? ஐசுவரியான் எல்லோரும் மரிப்பது போல் அவனுக்குரிய காலம் வரை வாழ்ந்து பின் அவனும் மரித்தான். ஆனால் அவனுக்குத்தெரியாது மரணத்திற்கு பிறகும் தன் ஆன்மா உயிர்ப்போடு இருக்கும் என்று அறியாதது அவன் தவறு. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்து போகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்து வரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். மரணத்திற்குப் பிறகு ஐசுவரியவான் இரண்டு காரியங்களை உணருகிறான். 1. அவனின் வேதனை 2. அவன் உறவுகள், சொந்தங்கள், இவை இரண்டையும் சிந்தித் திருக்க வேண்டியது அவன் பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்திருக்க வேண்டிய காரியம். ஆனால் காலம் கடந்த யோசனையால் யாருக்கும் பயனில்லை. மனிதர்கள் யாவரும் ஒருவித மாயையில் சிக்கி இருக்கிறார்கள். ஏராளமான செய்திகள், நிகழ்வுகள் மனிதர்களை சுற்றி சுழன்றுக் கொண்டிருக்கிறது. எதை நம்புவது என்ற குழப்பம், வேகமான உலகம் போன்ற காரணிகள் மனிதர்களை திசைத் திருப்பி உண்மைகளை தவிர்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவி கொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவி கொடாமலிருக்கிறீர்கள் என்றார். யோவான் : 8 : 42 – 47.


மழையையும் ஆசீர்வாதங்களையும் தருகிறவர் கர்த்தர் :


பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் : 1 : 28. ஆனால் நாமோ மழையையும், ஆசீர்வதங்களையும் கர்த்தர் தான் நமக்கு தருகிறார் என்று நம்ப மறுக்கிறோம். அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை. எரேமியா : 5 : 24. தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள். ஓசியா : 2 : 8. உண்மையில் பூமிக்கு மழையை தருகிறவர் கர்த்தர், புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப் பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர். எரேமியா : 14 : 22. அவ்வாறே நமக்கு நமக்கு தேவையான தானியம், எண்ணைய், மிருகங்களுக்கு வேண்டிய ஆகாரம், சம்பத்து பெருக்கம், கடன் இல்லா வாழ்க்கை, தலைமுறை தலைமுறைக்கு இரக்கம், கர்பத்தின் கனி, நோயற்ற வாழ்வு, சமாதானம் என்று அனைத்தையும் நமக்கு கர்த்தர் தருகிறார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார். உபாகமம் : 11 : 13 – 15. நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும், உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். உபாகமம் : 8 : 12 – 18. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை. உபாகமம் : 15 : 6. உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை. கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார். உபாகமம் : 7 : 13 – 15. தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை. லேவியராகமம் : 26 : 4. என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். நீதிமொழிகள் : 4 : 10. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் : 17 : 3.


இயேசு கிறிஸ்து நம்மை பரிசுத்தமாக்கவே வந்தார் :


தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்த ஜனத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் நோக்கம். அதற்காகத்தான் ஆதாம் – ஏவாளை உருவாக்கி இந்த பூமியை மனித குடியிருப்புக்காக கொடுத்தார். வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. ஏசாயா : 45 : 18. தேவனாகிய கர்த்தர் ஆதாம் – ஏவாள் தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ ஒரு பிரதானமான கட்டளையை கொடுத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் : 2 : 15 – 17. பாவத்தின் சம்பளம் மரணம், பரிசுத்தமாய் வாழ்வதே நித்திய நித்தியமான வாழ்வு. ஆனால் மனிதனோ தேவனுடைய வார்த்தையை அசட்டை பண்ணினான், விளைவு சாபம். பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார். ஆதியாகமம் : 3 : 22 – 24. ஆதாம் – ஏவாளைத் தொடர்ந்து ஏனோக்கு, ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். ஆதியாகமம் : 5 : 22 – 24. ஏனோக்குக்குப் பின்பு நோவா, நோவாவும் உத்தமனும், நீதிமானுமாய் இருந்து தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான் ஆனால் அவர்களால் அவர்கள் பின் சந்ததியினரை கர்த்தருக்குள் தொடர்ந்து நடத்தவோ அல்லது பரிசுத்த வம்சமாய் காத்துக்கொள்ளவோ முடியாமல் போனது. இந்த மூன்று நிலையிலும் தங்கள் தலைமுறையினரை கர்த்தருக்குள் நடத்த தவறினாலும் கர்த்தர் தொடர்ந்து விடாமல் ஆபிரகாமை தெரிந்துக்கொண்டார். ஆபிரகாம் மூலமாக தன் எண்ணத்தை நிறைவேற்ற சித்தமுள்ளவரானார். ஆபிரகாம் தேவனுக்கு ஏற்றவனாக இருந்தபோதிலும் ஆகார் மூலமாக ஒரு சந்ததி உருவாகக் காரணமாக அமைந்து விட்டான். அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். ஆதியாகமம் : 16 : 12.


பரிசுத்தமாய் வாழ வழிகாட்டிய தேவ மைந்தன் :


ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள். அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப் பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது. சகோதரரே நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது. இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம். கலாத்தியர் : 4 : 22 – 31. அபிரகாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும் படியாய், அதற்கேற்ப தன் பின் சந்ததிகளுக்கு தேவனுடைய கட்டளைகளை போதித்து வந்தான். கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். ஆதியாகமம் : 18 : 19. என்றாலும் ஆபிரகாமைத் தொடர்ந்து ஈசாக்கு, யாக்கோபு என்பவர்கள் கர்த்தருக்கு கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்தப்போதிலும் அவர்களுடைய பின் சந்ததியார் அவ்வழியில் நிலைத்திராமற் போனார்கள். ஆகவே இயேசு கிறிஸ்து வெளிப்பட்டார், மாத்திரமல்ல தனது முப்பத்திமூன்றரை ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தக் காலத்தில் மனுஷனுக்கு மாதிரியாக வாழ்ந்தார். அவருடைய உபதேசத்தின் படி வாழும் போது நாமும் பரிசுத்தமாய் வாழமுடியும். அப்படி வாழ்பவர்களே ஞானவான்களாகவும், நீதிமான்களாகவும் பிரகாசிக்க முடியும் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிக்கிறது. ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்கு முள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானியேல் : 12 : 3.


சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை. Evg.Babu T Thomas, Our Shepherd’s Voice Foundation, Ranipet – Tamil Nadu, India. https://ourshepherdsvoice.wixsite.com/mysite




Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page