மரணம் - சுவி.பாபு T தாமஸ் !
மரணம் – சுவி.பாபு T தாமஸ்!
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. சங்கீதம் : 116 : 15.
ஜெயம் எடுத்த மரணங்கள் :
ஜெயம் எடுத்த மரணங்கள் கர்த்தருடைய பார்வைக்கு மிகவும் அருமையானதாக கருத்தப்படுகிறது, காரணம் இந்த பூமியில் காணப்படும் சோதனைகளை மேற்கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி வென்றவையாகும். உதாரணத்திற்கு, எப்படி நம் பிள்ளைகள் சோதனைகளை கடந்து கல்வியில் சாதனைகள் படைத்தால் பெற்றோருக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ அப்படிப் பட்ட மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் பரிசுத்த வான்கள் மரணத்தில் இருக்கிறது என்பதே நிதர்சனமாகும். இந்த பூமியில் மனுக்குலம் வாழ்வது என்பது மாறுதலுக்கு உட்பட்டு வாழும் முறையாகும். மனிதன் நித்திய நித்தியமாக வாழவே படைக்கப்பட்டவன், ஆனால் இடையில் மனிதன் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு பூமியில் வாழ்வது அவசியமாக இருக்கிறது. அதாவது, இதை இன்னும் விரிவாக பார்க்கவேண்டுமானால் ஆதியில் மரணம் என்ற ஒன்று இல்லவே இல்லை. தேவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதனாகிய ஆதாமும் ஏவாளும் நேரடியாக ஏதேன் என்னும் நந்தவனத்தில் சஞ்சரிக்க அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய வாழ்வு ரம்மியமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருந்தது. அவர்களுக்கு ஒரே ஒரு கட்டளை கொடுக்கப்பட்டது, தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் : 2 : 16 – 17. அதேப்போல மனிதனுக்கு ஒரு முக்கிய பணியும் கொடுக்கப்பட்டது, தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதியாகமம் : 2 : 15. ஆனால் அவர்களோ தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் மூன்றாம் நபரின் பேச்சைக் கேட்டு நடக்க முற்பட்டார்கள், விளைவு ஏதேன் தோட்டத்தில் வாழும் அதிகாரத்தை உரிமையை இழந்தார்கள். இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. ரோமர் : 5 : 12. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் : 6 : 23. மனிதன் எங்கே தன் வாய்ப்பை இழந்தானோ அங்கிருந்தே தனது தேடலை துவங்க வைத்தார் கர்த்தர். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ரோமர் : 8 : 6. இதற்காகத்தான் இயேசு கிறிஸ்துவும் இந்த பூமிக்கு வந்தார். வந்தவர் மனிதனுக்கு வாழ்வின் வழிகளை போதித்தார், அதோடு நில்லாமல் அதற்கேற்ப வாழ்ந்தும் காட்டினார். மனிதன் பரிசுத்தமாய் இருந்தப்போது, அவன் ஏதேன் தோட்டத்தில் இருந்தான், தேவனோடும் இருந்தான். இதே நிலையை மனிதன் அடைய வேண்டும் என்பது தான் தேவனுடைய திட்டம். இந்த திட்டத்திற்கு ஏற்ப மனிதன் செயல் படவேண்டுமானால், அவன் பல நிலைகளை கடந்து வரவேண்டும். அப்போது மனிதன் தேவனை அடைய முடியும். ஆகவேதான் மரணம் மனிதனுக்கு வந்தது, மரணம் மறுரூபத்திற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. மரணம் ஒரு சுகமான அனுபவம், ஆனால் மனிதனோ மரணத்தைக் கண்டு பயப்படுகிறான். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்தார், அது ஒரு நடைமுறை. அதேப் போல இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தார், இதுவும் ஒரு நடைமுறை என்பதை மனிதன் உணரவேண்டும். ஆனால் ஏன்? இயேசு கிறிஸ்து உயிருடன் எழுந்தார் என்று யோசிப்போமானால், நாமும் அவ்வாறே அவர் வரும்போது எழுந்திருக்க வேண்டும் என்ற உண்மை நமக்கு புலப்படும். எப்படி என்று கேட்பீர்களானால், தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். I கொரிந்தியர் : 6 : 14. இது தான் அதற்கான பதில்.
மரணம் தரும் மறு ரூப அனுபவம் :
வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். I கொரிந்தியர் : 15 : 40 – 57. ஆனப்படியினாலே மரணம் என்பது தவிர்க்கமுடியாதது, அதேப்போல மரணத்திற்குப்பின்னான வாழ்வுக்கான சிந்தனையை மேலோங்கச் செய்வதே மேற்ச்சொன்ன வார்த்தைகளின் நோக்கமாக புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு பிள்ளை பிறக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம், பிறந்த அந்த குழந்தையை குறித்த திட்டங்கள் பெற்றோருக்கு ஏராளம் உண்டு. கனவுகள் உண்டு, அந்த கனவை நனவாக்க பெற்றோர்கள் எடுக்கும் பிரயத்தனங்கள் சொல்லிமாளாது. அந்த பிள்ளையின் ஆரம்ப பள்ளி துவங்கி மேற்படிப்பு, உயர்கல்வி வரை அதற்கான செலவினங்கள், போக்குவரத்து இத்தியாதிகள் முதற்கொண்டு நிலையில்லாத உலகின் அனைத்து தேவையையும் பார்த்துப்பார்த்து திட்டமிடும் பெற்றோர்கள், ஏனோ மரணத்திற்கு பின்னான வாழ்வுக்கான எந்த ஒரு திட்டத்தையும் ஜனங்கள் தீட்டுவதில்லை. மரணத்தைக் குறித்து பரிசுத்த வேதாகமம் மிகத் தெளிவாகவே பேசுகிறது. ஆனாலும் மரணத்தைக் குறித்த அச்சம் மக்களிடத்தில் அதிகமாகவே இருக்கிறது. நெருப்பு என்று சொன்னால் வாய் சுடவா போகிறது.
மரணத்திற்கு பின்னான வாழ்வு :
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினி ஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார். லூக்கா : 16 : 19 – 31. ஐசுவரியவான் பூமியில் வாழும் போது சம்பூரணமாய் சகல சௌபாக்கியத்துடன் வாழ்ந்து வந்தான். ஆனால் அவனுக்கு மரணத்திற்கு பின்னான வாழ்வைக் குறித்த ஞானம் இல்லை, அதற்கான ஆயத்தமும் அவனிடத்தில் இல்லை. ஆகவே தான் அக்கினி கடலின் தகிப்பை தாளமுடியாமல் இரண்டு காரியங்கள் யோசிக்கிறான். 1. தான் வாழும் போது எல்லா நலமும் பெற்று வாழ்ந்து வந்தோம். ஆனால் மரணம் என்பது நீண்ட துயில் என்று எண்ணி வாழ்ந்தது தவறாகிவிட்டது. 2. நம்மை போல் நம் உறவுகளும் இங்கே வந்து துன்பம் அனுபவிக்காமல் இருக்க அவர்களுக்கு அறிவிக்க விரும்பினான். ஆனால் என்ன? அவன் நினைத்தது எண்ணியது எல்லாம் காலம் கடந்த செயல். அதினால் ஒரு பயனும் இல்லை, இதையே அவன் பூமியில் வாழும் போது செய்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் அவன் சம்பூரணமாக வாழும் போது செய்ய தவறிவிட்டு இப்போது வருந்தி எந்த பிரயோஜனமில்லை. அப்படியே மற்றொரு தரப்பையும் பார்க்கலாம் வாருங்கள். அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். வெளி : 20 : 4 – 6. ஆக மரணத்திற்கு பிறகு இரண்டு விதமான நிலைகள் இருப்பதாக பரிசுத்த வேதாகமம் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. ஒன்று கர்த்தருடைய கட்டளைப்படி அவருடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு கிறிஸ்துவுக்குள் மரிக்கிற பரிசுத்தவான்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்களாக கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷம் அரசாள நித்திய நித்தியமான வாழ்வுக்கென்று உயிரடைவார்கள். அப்படியே மற்றொரு கூட்டத்தாரின் நிலையோ, மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். வெளி : 20 : 12 – 15.
ஆவி, ஆத்துமா, சரிரம் :
இங்கே நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால் நாம் தேவனுடைய ஆயிரம் வருஷ அரசாட்சி மற்றும் அவரோடு நித்திய நித்தியமாக வாழ்வதற்கென்று முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கெடுக்கிறவர்களாக அதற்கேற்ற ஆயத்தத்தோடு மரிக்கபோகிறோமா? அல்லது அக்கினிக்கடலில் தள்ளப்பட இரண்டாம் மரணத்தில் பங்கடைகிறவர்க்களாக மரணத்தை தழுவப் போகிறோமா? என்பது தான் நம்முன் இருக்கும் ஒரே கேள்வி. நாம் அனைவரும் மூன்று வகையான தன்மை உடையவர்கள் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. 1. ஆவி 2. ஆத்துமா 3. சரிரம், ஆக இம் மூன்று தன்மையுடன் படைக்கப்பட்டவன் தான் மனிதன். சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரிரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும் போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. I தெச : 5 : 23. இதில் ஆவி என்பது ஜீவசுவாசம், இதை மனுஷனுக்குள் செலுத்துகிறவர் கர்த்தர் என்று பரிசுத்த வேதாகமம் தெரிவிக்கிறது. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் : 2 : 7. மனித வாழ்வின் காலம் முடிந்தப் பிறகு, சுவாசம் தந்த தேவனிடமே அது திரும்புகிறது. இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. பிரசங்கி : 12 : 7. அடுத்தது சரிரம், இது பூமிக்குரிய சாயல் அதுவும் மரணத்திற்குப்பின் பூமிக்கே திரும்புகிறது. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். ஆதியாகமம் : 3 : 19. இவ்விதமாய், சரிரம் பூமியிலிருந்து எடுக்கப்பட்டப்படியால் பூமிக்கும், ஆவி தேவனிடத்திற்கும் திரும்புகிறது என்று பார்த்தோம். கடைசியாக இருப்பது ஆத்துமா, இந்த நம் ஆத்துமாவுக்கு மரணமில்லை. பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். III யோவான் : 1 : 2. மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று. அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல் மூண்டது. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார். ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார். அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது. கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார். அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார். கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார். கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை. அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல், அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாகவும், தம்முடைய கண்களுக்குமுன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார். II சாமுவேல் : 22 : 5 – 25.
ஆத்துமா விழித்திருக்கும் :
நம்முடைய ஆத்துமா விழித்துக் கொண்டே இருக்கும், நம்முடைய ஆத்துமாவுக்கு அழிவு என்பது இல்லை. ஆனால் அது விழிப்போடு இருந்து நம்மை குறித்து சாட்சி கொடுக்கும் இது சத்தியம். இதை இலகுவாக புரிந்துக்கொள்ள வேண்டுமானால் ஒன்றை கவனித்தால் போதுமானது. அது தான் விமானங்களில் பொருத்தப்படும் கறுப்புப் பெட்டி என்றால் மிகை இல்லை என்றே சொல்லவேண்டும். கறுப்புப் பெட்டியில் பதிவுச் செய்யப்படும் தகவல்களைப் போலவே நம்முடைய ஆன்மாவும் நம்முடைய வாழ்வில் காணப்படும் அனைத்து தகவல்களையும் அதாவது ஒருவர் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து தகவல்களையும் ஆன்மாவானது பதிவு செய்து பத்திரப்படுத்தும். இந்த ஆன்மா அல்லது ஆத்துமா தான் நமக்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே சாட்சிச் சொல்லும். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள் : 18 : 21. ஒரு அரிய தகவலையும் பரிசுத்த வேதாகமம் நமக்கு வெளிப்படுத்துகிறது, என்னவென்றால் பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். ஆதியாகமம் : 25 : 8. இதே காரியத்தை யாக்கோபின் மரணச்செய்தியிலும் காணப்படுகிறது. யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். ஆதியாகமம் : 49 : 33. அப்படியானால் மரணம் ஜனத்தை ஜனத்தினின்று பிரிக்காமல் நியாயத்தீர்ப்பின் நாளில் மட்டுமே பிரிக்கப்படுகிறார்கள் என்கிற பரிசுத்த வேதாகமத்தின் இந்த வார்த்தைகளும் உண்மையாகிறது. தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான். அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள். வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். லூக்கா : 17 : 33 – 37. இந்தக்காரியத்தை வேறு சிலர் வேறு விதமாகச் சொல்லுகிறார்கள். அதாவது இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக எடுத்துக்கொள்ளுதல் என்கிற ரீதியில் புரிந்துக்கொள்ளப் படுதலாக அமைகிறது. ஆனால் வேதத்தில் ஏனோக்கும், எலியாவும் மட்டுமே உயிரோடு எடுத்துக்கொள்ளபட்டவர்கள் என்று கூறுகிறது. விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான். எபிரெயர் : 11 : 5. அவ்வாறே எலியாவும் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டான். அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். II இராஜாக்கள் : 2 : 11.
மரணம் தரும் எச்சரிக்கை :
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் : 5 : 24. அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.
அப்பொழுது, அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். மத்தேயு : 25 : 31 – 46. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. II கொரிந்தியர் : 7 : 10.
புதிய வானம் புதிய பூமி நிரந்தரம் :
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன் தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள் அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள். வெளி : 21 : 1-7, 22 – 27. இன்றைக்கு உலகம் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது. நாகூம் : 3 : 1. அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் பஞ்சமில்ல. மனிதனை மனிதன் நம்பாத காலமாக இருக்கிறது. குற்றமற்ற இரத்தம் ஏராளமாக பூமியிலே சிந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். லூக்கா : 18 : 8. மனமாற்றம் ஒன்றே வழி, ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை. Evg.Babu T Thomas, Our Shepherd’s Voice Foundation, Ranipet – Tamil Nadu, India. https://ourshepherdsvoice.wixsite.com/mysite
コメント